ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மனிதனின் உணர்வுகள் மூளையின் மின் காந்தப்புலங்களா? அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து!

மனிதனின் உணர்வுகள் மூளையின் மின் காந்தப்புலங்களா? அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து!

மாதிரி படம்

மாதிரி படம்

மூளையின் செயல்பாட்டின் பெரும்பகுதி இன்னும் ஒரு மர்மமாக இருந்தாலும், குறைந்தது ஒரு விஷயம் அறியப்படுகிறது. நியூரான்கள் எனப்படும் சிறப்பு செல்கள் வழியாக சிறிய மின் சமிக்ஞைகளால் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் பின்னர் ஒரு சிறிய மின்காந்த புலத்தை (EMF) உருவாக்குகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :

மனிதனின் மிகவும் சிக்கலான அமைப்பு நமது மூளைதான். எந்த நேரத்தில் எம்மாதிரியான கட்டளைகளை மூளை நமக்கு அளிக்கும் என்பது யூகிக்க முடியாதது. மாபெரும் கண்டுபிடிப்புகளை அளிப்பதும் மூளைதான், மிகப்பெரும் பேராபத்துக்களை ஏற்படுத்துவதும் மூளை தான். இத்தகைய கடினமான மனித உள்ளுறுப்பை பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக சென்று கொண்டிருக்கிறது. அதை பற்றிய ஒரு சமீபத்திய தகவலைக் காண்போம். அறிவியல் புனைகதை முதல் தத்துவம் வரை, மனித நினைவின் கேள்வி எப்போதும் பெரிய சிந்தனையாளர்களை தொந்தரவு செய்கிறது.

பொதுவாக உணர்வுகள் மனிதனை உணர, மனப்பாடம் செய்ய, பிரச்சனைகளில் நமக்கு ஒரு தார்மீக அல்லது சரியான முடிவை எடுக்க வாய்ப்பளிக்கிறது. மேலும் அது உங்களை காதலிக்கவோ, வெறுக்கவோ செய்கிறது. குறைந்தபட்சம் ஒரு விஞ்ஞானிக்கு, இதைப்பற்றிய சில பதில்கள் உள்ளன. Surrey பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நரம்பியல் அறிவியல் பேராசிரியர் டாக்டர் ஜான்ஜோ மெக்பேடன், மனித நினைவை உருவாக்குவது என்ன என்ற நீண்டகால மற்றும் சிக்கலான மர்மத்தை தீர்த்து வைத்துள்ளார். மெக்பேடன் கருத்துப்படி, இந்த தனித்துவமான மனித பண்பு மூளையின் நியூரான்களின் மின்காந்த புலத்தால் தயாரிக்கப்படுகிறது.

மனித உணர்வு என்பது அறிவியல் மற்றும் மனிதநேயங்களுக்கான விவாதத்தின் ஒரு சூடான தலைப்பு.

பலர் விலங்குகளுக்கு ஏன் விழிப்புணர்வு இருக்கிறது என்றும் மனிதன் ஏன் விலங்குகளை போல் அல்லாமல் தனித்து நிற்கிறான் என்று புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகின என்றார் அவர். இந்த கூற்றை நம்புபவர்கள் ஆன்மீக மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விளக்கங்களை அளித்துள்ளனர், சிலரால் ஒரு ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாதபோது ஆத்மா தான் மூல காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்களாலும் நம்ப முடியாது. அதற்கு பதிலாக, மெக்பேடன் சான்றுகள் மற்றும் உண்மைகளுடன் அறிவியல் பகுத்தறிவை வழங்குகிறார்.

இவரது கோட்பாடு நியூரோ சயின்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு, சிந்தித்தல், நிர்வாகம் என மூளை செய்யும் செயல்கள் பலவும் ஒரு மர்மமாகும், இது தத்துவவாதிகள், இறையியலாளர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் சாதாரண மக்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நினைவு பற்றிய இலக்கியக் கருத்து, பல நரம்பியல் விஞ்ஞானிகளின் புள்ளிவிவரங்கள் என பலவற்றை அவர் தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

‘சுதந்திரம்’ என்ற கருத்தைச் சுற்றி தனது கருத்தை மையமாக மெக்பேடன் கொண்டுள்ளார். அந்த ஆய்வறிக்கையின் படி, “சுதந்திர விருப்பம்” என்பது மக்களின் சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும், வாழ்க்கையில் அவர்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்க்கான மனித திறன். மூளைக்குள் நரம்புகள் செல்வதால் அவை இயற்கையாகவே மின்காந்த புலத்தை கொண்டிருக்கும் அதன் மூலம் நமக்கு நினைவு, சுதந்திரம் மற்றும் தன்னார்வ செயல்களைத் தருகிறது.

Also read... புற்றுநோயை குணமாக்க இனி மருந்து தேவையில்லை..நம் உடம்பிலேயே ஒரு உறுப்பு இருக்கு - ஆய்வில் கண்டுபிடிப்பு

மூளையின் செயல்பாட்டின் பெரும்பகுதி இன்னும் ஒரு மர்மமாக இருந்தாலும், குறைந்தது ஒரு விஷயம் அறியப்படுகிறது. நியூரான்கள் எனப்படும் சிறப்பு செல்கள் வழியாக சிறிய மின் சமிக்ஞைகளால் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் பின்னர் ஒரு சிறிய மின்காந்த புலத்தை (EMF) உருவாக்குகின்றன.

இது எலெக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் காந்தமண்டலவியல் வரைபடம் (MEG) போன்ற பல மூளை ஸ்கேனிங் நுட்பங்களால் நிறுவப்பட்டுள்ளது, ஆனால் இது பெரும்பாலும் "பொருத்தமற்றது" என்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது மிகவும் பொருத்தமானது என்றும் மனித நினைவின் குழப்பமான பிரச்சினைக்கான பதில் என்றும் மெக்பேடன் கூறுகிறார். EMF என்பது ஒவ்வொரு சிந்தனை, இயக்கம் மற்றும் செயல்முறையின் ஒரு தயாரிப்பு. தற்போதைய நிலவரப்படி, இது ஒரு கருதுகோளாகவே உள்ளது. ஆனால் இது நினைவின் இறுதி பதில் என்றும் ரோபோக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது முக்கியமாக இருக்கும் என்றும் மெக்பேடன் உறுதியாக நம்புகிறார்.

First published: