தடுப்பூசிக்கு பிறகு கொரோனா ஆன்டிபாடி சோதனை அவசியமா?

கோப்புப் படம்

உலக அளவில் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்டோர் பாதி அல்லது முழு அளவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட உலக அளவில் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்டோர் பாதி அல்லது முழு அளவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செயல்பாடு

மருந்துகள் உடலுக்குள் ஆற்றும் எதிர்வினைபோல் அல்லாமல் தடுப்பூசி தனது பணியை தொடங்க அதற்கான காலத்தை எடுத்துக்கொள்ளும். உடலுக்குள் ஆன்டிபாடிகளை உருவாக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனடியாக ரியாக்ஷன் கிடைக்காது. இதனால் பெரும்பாலானோர் தடுப்பூசி வேலை செய்கிறதா? இல்லையா? என சந்தேகம் கொள்வது இயல்பு. ஒருவேளை உங்களுக்குள் அந்த சந்தேகம் இருந்தால் ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பாக, தடுப்பூசி எடுத்துகொண்ட பிறகு உங்களது உடலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தடுப்பூசியின் செயல்பாடு தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்

கொரோனா சோதனை கோரிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா சோதனைகள் செய்துகொள்ள வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்து கொண்டவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அவர்களும் முன்னசெரிக்கை நடவடிக்கையாக உடலில் உள்ள ஆன்டிபாடிகளின் செயல்பாடு குறித்து சோதனை மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். முதியவர்கள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

ஆன்டிபாடி சோதனை ஏன் அவசியம்?

உடலில் உள்ள நோய்தொற்றுக்கு எதிராக போராடும் வகையிலான வைரஸ்களை உருவாக்குவது ஆன்டிபாடிகளின் வேலையாகும். உடம்பில் உள்ள தொற்று வைரஸ்களை, ஆன்டிபாடிகள் அழிப்பதுடன், மீண்டும் ஒருமுறை தாக்காத வகையில் பாதுகாப்பு அரண்களையும் உருவாக்கித் தருகிறது. உங்கள் உடலில் குறிப்பிட்ட வைரஸூகளுக்கு எதிராக போராடுவதற்கு ஆன்டிபாடிகள் இல்லாத சூழலில் தடுப்பூசி மூலம் செலுத்தப்படும் ஆன்டிபாடிகள், அந்த வைரஸ்களுக்கு எதிராக போராடும் செல்களை தூண்டுகின்றன. அந்த நிலையில், உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு இருக்கிறது? எதிர்காலதில் வைரஸ்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கு ஆன்டிபாடி சோதனை அவசியமாகும்.

எப்போது முழுமையாக தடுப்பூசி வேலை செய்யும்

நோய்க்கு தகுந்தார்போல் தடுப்பூசிகள் உள்ளன. ஒரு சில நோய்களுக்கு ஒரே ஒரு தடுப்பூசியும், சில நோய்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் உள்ளன. எந்த ஒரு நோய்க்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், அவை உடலில் கலந்து சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு முழுவீச்சில் பணியாற்றும். குறிப்பாக, இரண்டு தடுப்பூசி எடுத்துகொள்ளும்போது உடனடியாக ரியாக்ஷன் கிடைக்காது. ஏற்கனவே கூறியதுபோல் சுமார் 14 நாட்களுக்குப்பிறகு தடுப்பூசியின் செயல்பாட்டை உங்களால் உணரமுடியும்.

போதுமான நோய்எதிர்ப்பு சக்தி இல்லையென்றால்?

சர்வதேச அளவின்படி 10 முதல் 1000 IU -களுக்கு இடையில் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு இருக்க வேண்டும். ஒரு நபருக்கு ஆன்டிபாடிகள் கொடுக்கும்போது அந்த அளவானது சுமார் 300 ஆக உயரும். உதாரணமாக கூறினால், நோய் எதிர்ப்பு சக்தி ஒருவருக்கு அதிகமாக இருந்தாலும், சில உடல்நலக் கோளாறுகள் காரணமாக அவை ரியாக்ட் செய்யாமல் இருக்கலாம் அல்லது குறைவான எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். அந்த சமயத்தில் ஆன்டிபாடிகள் எடுத்துக்கொள்ளும்போது அந்த வைரஸூக்கு எதிராக போராடும் ஆன்டிபாடிகள் உங்கள் உடலில் உருவாகும். நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

Also read... புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது

நீங்கள் ஆன்டிபாடி சோதனை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் பலரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆன்டிபாடி சோதனைகள் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்போது ஏன் தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும்? என சிலர் எண்ணக்கூடும். இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, கொரோனா போன்ற நோய் பல்வேறு உருமாறிய நிலையில் பரவிக்கொண்டிருக்கும் வேலையில், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை வைத்து மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என எச்சரிக்கின்றன. தடுப்பூசி எடுத்துகொள்வது மட்டுமே சிறந்தது என தெரிவிக்கும் மருத்துவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் முன்பு அல்லது பின்பு ஆன்டிபாடி சோதனை என்பது அவசியமற்றது என விளக்கம் கொடுத்துள்ளனர். அரசு மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், அதனுடன் சேர்த்தால் தேவையற்ற காலதாமதமும், தேவையற்ற பொருளாதார செலவு எனவும் கூறுகின்றனர்.

தடுப்பூசியின் செயல்பாடு

தடுப்பூசிக்கு பின்பு ஒருவர் ஆன்டிபாடி சோதனை செய்துகொள்ளும்பட்சத்தில், ஒருவருடைய முடிவுகளை மட்டும் வைத்து ஒட்டுமொத்த சமூகத்துக்கான முடிவாக தீர்மானிக்க முடியாது. அந்த ஆன்டிபாடி சோதனை உங்களுக்குள் நோய்கட்டுப்படுத்தும் அளவை மட்டுமே காண்பிக்கும். தடுப்பூசியின் செயல்பாட்டை மருத்துவ நிபுணர்கள் மட்டுமே நிர்ணயிக்க முடியும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: