முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்துமா ?

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்துமா ?

கொரோனா வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போட்டு கொள்ளலாமா ? வேண்டாமா ?  என்ற சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போட்டு கொள்ளலாமா ? வேண்டாமா ? என்ற சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போட்டு கொள்ளலாமா ? வேண்டாமா ? என்ற சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்.

  • Trending Desk
  • 2-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸின் டெல்டா வேரியண்ட் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தீவிர பரவல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக தடுப்பூசி போடாதவர்கள் SARS-COV-2 வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் கூட தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், சிலர் தடுப்பூசிகள் பயனற்றவை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் சிலர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு அல்லது ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைந்து, தொற்றுநோய் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றனர். குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களில் தடுப்பூசியின் செயல்திறன் காலப்போக்கில் குறைந்து போக வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலை கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட் தேவை குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. தற்போது, ​​பல விஞ்ஞானிகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மூன்றாவது தடுப்பூசி டோஸ் அதாவது பூஸ்டர் ஷாட்டை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உண்மையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு பூஸ்டர் ஷாட்களை வழங்க ஆரம்பித்துள்ளன.

COVID தடுப்பூசி பூஸ்டர்கள் என்றால் என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, தடுப்பூசியால் ஒருவரில் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் குறைய வாய்ப்புள்ளது. இது குறிப்பிட்ட மக்களில் தடுப்பூசியின் மூன்றாம்டோஸிற்கான தேவையை உருவாக்குகிறது. அதுவே "பூஸ்டர்" ஷாட் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு தற்போது பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பூஸ்டர் டோஸ் யாருக்கு தேவைப்படும்?

கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பகாலத்தில் அவசர நிலை பயன்பாடாக கொண்டுவரப்பட்ட COVID-19 தடுப்பூசிகள் வைரஸால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டது. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு COVID பூஸ்டர் டோஸ் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) படி, கட்டிகள் மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள், மேம்பட்ட அல்லது சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் என தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெற தகுதியானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைப் பெற்று, நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களும் கோவிட் பூஸ்டர் ஷாட்களைப் பெறலாம்.

தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?

தடுப்பூசிகள் உண்மையான வைரஸின் பிரதிபலிப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மையே. எனவே கோவிட் ஷாட் பெறும் நபர்கள் அவற்றின் லேசான பக்க விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பக்கவிளைவுகளை அனுபவிப்பதால் உங்களுக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல. மாறாக உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமியை அடையாளம் காணத்தொடங்கியுள்ளது என்று அர்த்தம். அல்லது COVID-19 தடுப்பூசி போட்டபிறகு ​​SARs-COV- 2 இன் உண்மையான ஸ்பைக் புரதத்தை போல இருக்கும் வைரஸ் துகள்களை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்கும்.

இதேபோல், தடுப்பூசி பூஸ்டர்களும் சில பக்க விளைவுகளைத் ஏற்படுத்தலாம் என்று சில அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. மேலும் பூஸ்டர் டோஸ்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய மருத்துவ ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில நாடுகள் தற்போது பூஸ்டர் ஷாட்டை நிர்வகிக்கத் தொடங்கினாலும், இதுவரை சேகரிக்கப்பட்ட சிறிய தரவுகளின் அடிப்படையில், பூஸ்டர் ஷாட்களின் பக்க விளைவுகள் லேசாக இருக்கலாம் என்றும் அவை முதல் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களில் ஏற்பட்ட பக்க விளைவுகளோடு ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Also Read : கோவிட் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது ஏன்..?

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

இப்போதைக்கு, ஃபைசர்ஸ் அல்லது மாடர்னா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸ் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) பெற்றுள்ளன. இஸ்ரேலில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ஜூலை மாத இறுதியில் இருந்து மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் மிகப்பெரிய சுகாதார வழங்குநரான கிளாலிட் நடத்திய ஆய்வின்படி, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை ஃபைசர்ஸ் தடுப்பூசி பூஸ்டர் ஷாட் பெற்ற 4,500-க்கும் மேற்பட்ட மக்களில், சுமார் 88% பேர் இரண்டாவது ஷாட் பெற்றபோது எப்படி உணர்ந்தார்களோ அதையே தற்போதும் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

பூஸ்டர் டோஸால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

ஆய்வின் படி, தடுப்பூசியின் மூன்றாம் டோஸை பெற்ற மக்கள் அனுபவித்த சில பக்க விளைவுகள் பின்வருமாறு,

* ஊசி போட்டுக்கொண்ட இடத்தில் வலி, சிவத்தல் மற்றும் வீக்கம்

* சோர்வு

* தலைவலி, தலைசுற்றல்

* தசை மற்றும் மூட்டு வலி

* காய்ச்சல் மற்றும் குளிர்

கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாமா? வேண்டாமா?

கோவிட் தடுப்பூசிகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், அது பெரிய பாதிப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது. அனைத்து தடுப்பூசிகளும் உடலில் சில நோயெதிர்ப்பு ரெஸ்பான்ஸ்களை தூண்டுகின்றன. அதனால் அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் கொரோனா தடுப்பூசிகள் ஒரு நோய்க்கிருமியின் பிரதிபலிப்பாகும். இது உடலில் செலுத்தப்படும் போது நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகளை உருவாக்கி மற்ற வைரஸ் துகள்களை எதிர்த்துப் போராடுகிறது. இந்த செயல்முறை உடலில் அழற்சி எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. இது காய்ச்சல், சோர்வு, தலைவலி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். தற்போது கொடிய கொரோனா வைரஸ் மற்றும் அவற்றின் மறுபாடுகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus