Home /News /lifestyle /

மனமே சற்று இளைப்பாறு 2 : இந்த நேரத்தில் தேவையற்ற எண்ணங்களை தவிருங்கள்..!

மனமே சற்று இளைப்பாறு 2 : இந்த நேரத்தில் தேவையற்ற எண்ணங்களை தவிருங்கள்..!

கொரோனா மனப்பதட்டம்

கொரோனா மனப்பதட்டம்

கொரோனா வந்துவிடுமோ என தொடர்ந்து அச்சப்படுவதை  தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, வந்தால் எப்படி எதிர்கொள்வது என தயாராக இருக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
குடும்ப உறுப்பினர் ஒருவர் இரவில் லேசாக இருமிக் கொண்டிருக்கிறார். உடனே நம் மனது இது கொரோனாவாக இருக்குமோ, அடுத்தடுத்து என்ன நடக்குமோ என பதபதைத்து விடுகிறது. இது போன்ற நேரத்தில் தான் தெளிவாக யோசித்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“தகவல்களை தெரிந்துக் கொள்ள என்ற நோக்கத்தில் மட்டும் ஊடகத்தில் வரும் செய்திகளை பாருங்கள். எந்நேரமும் அதையே பார்த்துக் கொண்டிருப்பது எந்த பலனும் அளிக்காது. அதே போன்று சமூக ஊடகங்களில் யாருக்கு என்னவாயிற்று, எப்படி ஆயிற்று என ஸ்க்ரால் செய்து படித்துக் கொண்டே இருப்பது மன ஆரோக்யத்துக்கு உதவாது. நமது ஒவ்வொரு உரையாடலும் கொரோனா பற்றியே இருப்பதை தவிர்க்க வேண்டும” என்கிறார் மன நல ஆலோசகர் நப்பின்னை.

மனம் குழப்பத்தில் இருக்கும் போது என்ன செய்யலாம் என டிப்ஸ் வழங்குகிறார் அவர்.

“ஆங்கிலத்தில் THINK என்று சொல்லப்படும்.
T- Thought - இது என்ன விதமான எண்ணம்? நேர்மறையான எண்ணமா அல்லது எதிமறையான எண்ணமா?
H- Helpful - இந்த எண்ணம் இப்போது எனக்கு உதவிகரமானதாக உள்ளதா?
I - Inspiring - இந்த எண்ணம் என்னை ஊக்கப்படுத்துகிறதா?
N- Necessary - இந்த எண்ணம் அவசியமானதா?
K-Kind - இந்த எண்ணம் எனக்கு ஆறுதலாக உள்ளதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை என்றால் அந்த எண்ணத்தை நீக்குவதே சரியானதாகும்” என்கிறார் அவர்.தெளிவான மனமே சரியான முடிவுகளை எடுக்க முடியும். ஒருவருக்கு அறிகுறி வந்தால் உடனே அவரை தனிமைப்படுத்தி, மருத்துவரை அழைத்து பேச வேண்டும். அதன் படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். “நாம் கவலைப்படுவதால் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. லைப்ஸ்டைல் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பிரச்னை உங்களுக்கு மட்டும் தான் நிகழ்கிறது என நினைத்தால் அது தவறு. எல்லாரும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள். கொரோனா தவிர்க்க முக கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவையே சிறந்த வழி. அதையும் மீறி வந்துவிட்டால் மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றுங்கள்” என்று அறிவுறுத்துகிறார் அவர்.

மனமே சற்று இளைப்பாறு 1 : கொரோனா பெருந்தொற்று பதட்டத்தை கையாள்வது எப்படி..? மனநல ஆலோசகர் அறிவுரை

கொரோனா வந்துவிடுமோ என தொடர்ந்து அச்சப்படுவதை  தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, வந்தால் எப்படி எதிர்கொள்வது என தயாராக இருக்கலாம். இணை நோய்கள் யாருக்கேனும் குடும்பத்தில் இருந்தால் அவை கட்டுக்குள் இருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளலாம்.

மன நல ஆலோசகர் நப்பின்னை


அருகில் இருக்கும் மருத்துவ சேவைகள் என்ன, அவற்றின் தொடர்பு எண் என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளலாம். நம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் யார், வீடு வீடாக வரும் மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் யார் என தெரிந்துக் கொள்ளலாம். இந்த தகவல்கள் நமது அக்கம் பக்கத்தினருக்கும் உதவியாக இருக்கும். நம் மனதின் பதட்டத்தையும் குறைக்க உதவும் என்று கூறுகிறார்.

மனநலம் சார்ந்த உங்கள் கேள்விகளை editor.tamil@nw18.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வாசகர்கள்  அனுப்பினால் அடுத்தடுத்து இந்த பகுதியில் வெளிவரும் கட்டுரைகளில் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெறப்படும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Anxiety, CoronaVirus, Mental Stress, மனமே சற்று இளைப்பாறு

அடுத்த செய்தி