கொரோனா வைரஸ் பாத்திரங்களில், தலைமுடியில் பரவுமா..?

இந்த நேரத்தில் சலூன் கடைக்குச் செல்வதுதான் பேராபத்து.

கொரோனா வைரஸ் பாத்திரங்களில், தலைமுடியில் பரவுமா..?
தலை முடி
  • Share this:
கொரோனா வைரஸ் இன்னும் எதன் மூலம் பரவும் எப்படியெல்லாம் பரவும் என்பதில் பலருக்கும் தெளிவு கிடைக்கவில்லை.

இருப்பினும் எதையும் தொடாமல் இருப்பதும் , அப்படித் தொட்டால் கைகளைக் கழுவி விடுங்கள் என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அது எங்கெல்லாம் பரவும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருப்போர் மேலும் படிக்க..!

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளதுபடி கொரோனா வைரஸானது பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் வாழலாம். அதுவும் அது தங்கியிருக்கும் இடத்தைப் பொருத்தது. உதாரணத்திற்கு திடமான பொருட்கள் மீது தங்கியிருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உயிருடன் இருக்கும். மூன்று நாட்களுக்கு மேலும் உயிர் வாழும் தன்மைக் கொண்டது என தேசிய சுகாதார மையம் கூறியுள்ளது.


தலைமுடிகளிலிருந்து வைரஸ் தொற்று பரவியதா என்று தெரியவில்லை. இருப்பினும் வைரஸுகள் பெரும்பாலும் தலைமுடிகளில் உயிர் வாழாது. ஒருவேலை அது பரவினாலும் நீண்ட நேரம் வாழ முடியாது என்று மருத்துவர் சாட் ஓமெர் (Saad Omer) டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தலைமுடி மட்டுமல்ல ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற மென்மையான, வழவழப்புத்தன்மைக் கொண்ட பொருட்களின் மீது பரவினால் வைரஸ் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது.

ஆனால் அது உயிருடன் இருக்கும் சமயத்தில் நிச்சயம் மற்றவர்களின் கைகளிலோ, உடலிலோ பரவும் என்கிறார் சாட். எனவே இந்தக் காலகட்டத்தில் முடியை விரித்து விடாமல் கொண்டை போட்டுக்கொள்ளுங்கள் அல்லது தினமும் தலைக்குக் குளித்துவிடுங்கள்.அதேபோல் வீட்டில் பாத்திரங்களை பயன்படுத்தினால் மீண்டும் ஒருமுறை கழுவி விடுங்கள் அல்லது சுடு தண்ணீரில் அலசுங்கள் என்று அறிவுறுத்துகிறார். இவ்வாறு செய்துவிட்டால் பரவுமோ, பரவாதோ என்ற அச்சம் வேண்டாம்.

இந்த நேரத்தில் சலூன் கடைக்குச் செல்வதுதான் பேராபத்து. எனவே கொரோனா பாதுகாப்பு சமையத்தில் சலூன் செல்வதைத் தவிருங்கள். வீட்டிலேயே தாங்களாகவே பராமரித்துக்கொள்வது நல்லது என்கிறார் சாட் ஓமெர்.

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading