Cooking Oil : விரைவில் சமையல் எண்ணெயின் விலை குறைய வாய்ப்பு - காரணம் இது தான்!

சமையல் எண்ணெய்

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை இந்த ஒரு வருடத்தில் 20% முதல் 56% வரை உயர்ந்துள்ளது.

  • Share this:
ஓராண்டிற்கும் மேல் நீடித்து வரும் கோவிட் தொற்று காரணமாக பல குடும்பங்களின் பொருளாதாரம் கடும் சிக்கலை சந்தித்து உள்ளது. இந்நிலையில் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை இந்த ஒரு வருடத்தில் 20% முதல் 56% வரை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் குடும்ப வருவாய் பாதிக்கப்பட்டு இக்கட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சமையல் எண்ணெயின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். COVID-19 காரணமாக வீட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், கடந்த மே மாதத்தில், அனைத்து சமையல் எண்ணெய்களின் மாதாந்திர சராசரி ரீட்டெயில் விலைகள் பெரும் ஏற்றத்தை கண்டன. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே நடுத்தர வர்க்க மக்களை மகிழ்ச்சியடைய செய்யும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வெகுவிரைவில் சமையல் எண்ணெய்யின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட கூடும் என்ற செய்தி தான் அது. சமையல் எண்ணெயின் விலையில் அடுத்த சில நாட்களில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமையல் எண்ணெய்களின் விலை கடந்த நான்கு நாட்களில் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது அமெரிக்க அரசால் விரைவில் எடுக்கப்பட உள்ள ஒரு முக்கிய முடிவின் காரணமாக சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



மேலும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அகில இந்திய சமையல் எண்ணெய் வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (Federation of All India Edible Oil Traders) தேசிய தலைவர் சங்கர் தாக்கர் கோவிட் நெருக்கடி காலத்தில் எவ்வாறு சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்தன என்பதற்கான காரணங்களை விளக்கி கூறினார். அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நம் நாட்டிற்கு தேவைப்படும் அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈத் (ஈகைத் திருநாள்) காரணமாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளை குறைவாக இருந்தது.

Castro oil : விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா உங்களுக்கு..?

அதே போல அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு 46% சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயோ எரிபொருளில் (bio fuel) கலக்க அனுமதிக்கப்பட்டது. இதற்கு முன் இது 13 சதவீதமாக இருந்தது. இது போன்ற பல காரணங்களால் சமையல் எண்ணைய்யின் விலை கடுமையாக அதிகரித்தது. இதனிடையே bio fuel-ல் மற்ற சமையல் எண்ணெயை எவ்வளவு சதவீதம் கலக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்க அரசு விரைவில் ஒரு முடிவு எடுக்க உள்ளது. இதன் பின்னணியில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயோ எரிபொருளில், 46 சதவீதம் வரை கலக்கும் முடிவும் வாபஸ் பெறப்படலாம். தவிர தற்போது மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் விளைவாக கடந்த 4 நாட்களில் சமையல் எண்ணெய்களின் விலையில் 15% வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இவை தவிர சமையல் எண்ணெய்யின் விலையை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதற்கான மற்றொரு காரணம், புதிய கடுகு விதைகள் (mustard seeds) சந்தைக்கு வரத் தயாராக உள்ளன என்றார். உள்ளூர் எண்ணெய் வர்த்தகர் ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு கடுகு உற்பத்தி தற்போது 86 லட்சம் டன் வரை இருக்கிறது. இப்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வர புதிய கடுகு விதைகள் தயாராகி இருப்பதால், சமையல் எண்ணெய்களில் விலையில் நிச்சயம் வீழ்ச்சி ஏற்படும்" என்று கூறி நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: