Home /News /lifestyle /

குன்னூர் டிரிப் போடுறீங்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

குன்னூர் டிரிப் போடுறீங்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

குன்னூர் சுற்றுலா தளம் குறித்த தகவல்

குன்னூர் சுற்றுலா தளம் குறித்த தகவல்

Coonoor tourist site : பசுமையான மலைகளுக்கு நடுவில் டிரெக்கிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் குன்னூர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பச்சை நிறம் போர்த்தியது போன்ற மலைகளைப் பார்த்தாலே நம்மை அறியாமல் உள் மனதிற்கு ஓர் உணர்வு ஏற்படும். எத்தனை மன அழுத்தங்களிலிருந்தாலும் நிச்சயம் சட்டென்று பறந்துபோகும். அப்படியொரு இயற்கையை அனுபவிக்கும் இடங்களில் ஒன்து தான் நீலகிரி மலைத்தொடர். இந்த மலைத் தொடர்களுக்குள் மத்தியில் கண்களைக் கவரும் அழகோடு காட்சியளிக்கிறது குன்னூர்.

    கடல் மட்டத்திலிருந்து சுமார் 1930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் இயற்கை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. இதோடு நீலகிரி டீ எஸ்டேட், பள்ளத்தாக்கில் மலையேற்றம் என்பது போன்ற சுவாரஸ்யமான மற்றும் பிரமிப்பை ஏற்படுத்தும் இடங்களும் குன்னூரில் இடம் பெற்றுள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

    மலை ரயில் பயணம்:

    பொம்மை ( ஊட்டி மலை ரயில்) ரயில் பயணம்


    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குழந்தைகளாய் மாறச் செய்யும் பயணங்களில் ஒன்றாக உள்ளது பொம்மை ரயில் பயணம். மலைப்பாதை ரயில் அல்லது பொம்மை ரயில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் மலைப்பகுதிகளில் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள 5 மலை ரயில் பாதைகளில் ஒன்றாக உள்ளது தமிழகத்தில் உள்ள ஊட்டி ரயில் பாதை. குன்னூருக்கு அருகில் உள்ள மேட்டுப்பாதையிலிருந்து தொடங்கும் இந்த மலை ரயில் 250 பாலங்கள் 16 சுரங்கங்களைக் கடந்து ஊட்டி வரை செல்கிறது. 254 பேர் அமரும் வசதி கொண்ட ரயில் அழகான பள்ளத்தாக்கு, விண்ணை முட்டும் மலைகள் மற்றும் குன்னூர் தேயிலைத் தோட்டங்கள் வழியாகப் பயணிப்பதால் சுற்றுலாப் பயணங்களின் மனதை இதமாக்குகிறது.

    பள்ளத்தாக்கில் மலையேற்றம்:

    பள்ளத்தாக்கில் மலையேற்றம்


    பசுமையான மலைகளுக்கு நடுவில் டிரெக்கிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம். குன்னூரிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் குன்னூரின் மலைகளால் சூழப்பட்டிருக்கும் பள்ளத்தாக்கில் மலை பயணம் செய்வது சாகசங்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும். இருந்த போதும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லலாம். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலையேற்றத்தை அனுபவிக்கும் வசதிகளும் உள்ளது. வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தை ஓட்டி அமைந்துள்ள இவ்விடம் மலை பயண விரும்பிகள் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் இடமாக உள்ளது.

    கட்டாரி நீர்வீழ்ச்சி:

    கட்டாரி நீர்வீழ்ச்சி


    பொதுவாக மலைகளுக்கு நடுவில் பல மூலிகை வாசத்தோடு வரக்கூடிய நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கே இதமாக இருக்கும். அதிலும் சவாலான மலையேற்றப் பயணத்தை விரும்புபவர்களுக்காகவே இந்தியாவில் உள்ள மிகவும் பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது கட்டாரி நீர்வீழ்ச்சி. இந்த நீர் வீழ்ச்சியைக் காண்பதற்காக மலையேறும் போது நகரத்தின் அழகையும் மலையின் பிரமிப்பையும் நம்மால் ரசிக்க முடியும். கட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையிலிருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

    குறிப்பாக மழைக்காலத்தில் மலை உச்சியில் இருந்து அதிவேகமாக விழும் நீர் கண்கொள்ளாக்காட்சியாக இருப்பதோடு, வானிலிருந்து பூமிக்கு நீர் வீழ்வது போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது.

    லேம்ப் பாறை:

    லேம்ப் பாறை


    குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும், இயற்கை ஆர்வலர்கள் விரும்பிப் பார்க்க வேண்டிய இடம் தான் லேம்ப் பாறை. காதலர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற வகையில் சிறந்த பிக்னிக் ஸ்பார்ட். மலை உச்சிக்குச் சென்று அழகாகச் சமவெளிகளைக் காண்பதற்கும், தேயிலைத் தோட்டங்கள், பிரமிக்க வைக்கும் மலைகள் அனைத்தையும் ஒரே சேர ரசிக்கும் இடமாக உள்ளது.

    ஹைஃபீல்ட் தேயிலை தொழிற்சாலை:

    ஹைஃபீல்ட் தேயிலை தொழிற்சாலை


    பொதுவாகத் தேயிலைத் தோட்டங்களும், தேயிலை தொழிற்சாலைகளும் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும். இது போன்று தான் குன்னூரில் உள்ள ஹைஃபீல்ட் தேயிலை தொழிற்சாலை. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேயிலை நடவு முதல் அனைத்து நடவடிக்கையையும் பற்றி இங்குத் தெரிவிக்கிறார்கள்.

    இந்த 5 இடங்கள் மட்டுமில்லாது குன்னூரில் டால்பின் மூக்கு, சிம்ஸ் பூங்கா, துருக்கோட்டை, குவன்சே தேயிலை தொழிற்சாலை போன்ற பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Coonoor, Tourist spots, Travel Tips

    அடுத்த செய்தி