பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்! ஆய்வுத் தகவல்

சிலர் தலைமை அதிகாரி தவறு செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளர்.

பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்! ஆய்வுத் தகவல்
அலுவலகம்
  • News18
  • Last Updated: September 18, 2019, 4:34 PM IST
  • Share this:
#MeToo இயக்கம் உலகம் முழுவதிலும் சீறிப் பாய்ந்த நிலையிலும் இந்தக் கருத்துக் கணிப்பின் வெளியீடு அதன் தீவிரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையே புரிய வைக்கிறது. சர்வே மங்கி என்ற ஆய்வுக் குழு நடத்தியக் கருத்துக் கணிப்பில் 55 சதவீதம் பெண்கள் தங்கள் பணியிடத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களை புகாரளிப்பதால் தன்னுடைய வாழ்க்கை பாதிக்குமோ என அஞ்சுவதாகவும், இதனால் புகாரைத் தவிர்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் பாலியல் தொல்லைகள் குறித்த பல வகையான கேள்விகள் பெண்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. 5,000 பெண்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில் 55 சதவீதம் பேர் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாரளிப்பதால் தன்னுடைய வாழ்க்கைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 68 சதவீதம் பெண்கள் #MeToo இயக்கத்தை முற்றிலுமாக நம்புவதாகவும், இதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்புகின்றனர்.

இந்த ஆய்வு கடந்த ஆண்டும் நடத்தப்பட்டது. அந்த ஆய்வோடு ஒப்பிடும்போது 91 சதவீதமாக இருந்த பாதுகாப்பு நம்பிக்கை 85 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதில் 55 சதவீதத்தினர் பாலியல் சீண்டல், தொல்லைகளை புகார் செய்வதால் தொல்லை கொடுத்தவரைக் காட்டிலும் தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். இதனால் தன்னுடைய கரியர் பாதிக்கப்படுமோ என எண்ணி தவிர்த்துவிடுவதாகக் கூறியுள்ளனர். சிலர் தலைமை அதிகாரி தவறு செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளர். அவர் தொடர்ந்து வேலையில் இருந்தால் தன்னுடைய வேலை பறிபோகுமோ என்ற பயத்தாலும் புகார் அளிக்காமல் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதோடு ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பெண் ஊழியர்களிடம் பாலியல் தொல்லை புகார்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்பது பாலியல் தொல்லை கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறது. பெண்கள் எப்படி புகார் அளிக்க வேண்டும், எந்தமாதிரியன பிரச்னைகளுக்கெல்லாம் புகார் தெரிவிக்கலாம் என ஊழியர்களுக்கு விளக்க வேண்டியது நிறுவனத்தின் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஆண் ஊழியராக இருக்குப் பட்சத்தில் 60 சதவீதத்தினர் பெண்களிடம் இது குறித்து பேச தயங்குவதால் விளக்கமளிப்பதில்லை என கண்டறிந்துள்ளனர்.

பார்க்க :நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை சமாளிக்க என்ன செய்யலாம்?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading