வேலைக்கு வரும் பெண்கள் மேக்அப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வந்தால் தினமும் சம்பள உயர்வு..!

இந்த பிரச்சாரத்தால் ஆண்கள் கூட்டத்தையும் அதிகரிக்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

news18
Updated: June 1, 2019, 6:58 PM IST
வேலைக்கு வரும் பெண்கள் மேக்அப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வந்தால் தினமும் சம்பள உயர்வு..!
வேலைக்கு வரும் பெண்கள் மேக்அப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வந்தால் தினமும் சம்பள உயர்வு..!
news18
Updated: June 1, 2019, 6:58 PM IST
ரஷ்யாவைச் சேர்ந்த டாட்ப்ரூஃப் (Tatprof) நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஸ்கர்ட் அணிந்து கொண்டும், அதிகமான மேக்அப் அப்ளை செய்து கொண்டும் வந்தால் சம்பளத்திலிருந்து தினமும் 107 ரூபாய் உயர்வு என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. பெண்கள் அதிகமாக மேக்அப் அப்ளை செய்தால்தான் அழகாக இருப்பார்கள் என்பது மூடத்தனம். இன்னும் இவர்கள் பண்படவேயில்லை என்று திட்டி வருகின்றனர்.

இருப்பினும்  நிறுவனமானது இந்த முன்னெடுப்பைப் பெருமையாகக் கருதுகிறது. இந்நிறுவனம் 'femininity marathon' என்னும் பிரச்சாரத்தை வரும் 30 தேதி வரை செயல்படுத்தவிருக்கிறது. அதை ஒட்டியே இந்த மாற்றம் முன்னெடுத்துள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. “இந்த பிரச்சாரத்தால் ஆண்கள் கூட்டத்தையும் அதிகரிக்கலாம் என்று இதன் தகவல் தொடர்புத் துறையிலிருந்து அனஸ்டஸியா கிரிலொவா கூறியுள்ளார். மேலும் அதில் இந்த தொடக்கம் பெண்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதனால் அவர்கள் தங்களுடைய பெண்ணியத்தையும் உணர்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதைக் கேட்ட பெண்ணியவாதி ஸலினா மார்ஷன்குலொவா தன்னுடைய வலைபூவில் தவறான சிந்தனை என்கிற கோணத்தில் கட்டுரை எழுதியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பதிவிலும் அந்நிறுவனத்தின் தலைவரை டைனோசர் என்றும் 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தைக் காட்டி பெண்ணையும் பெண்ணைக் காட்டி ஆணையும் ஈர்க்கும் செயலுக்கு எதற்கு இவர்கள் பெண்ணியத்தோடு முடிச்சுப் போடுகிறார்கள் என்றும் வினா எழுப்பியுள்ளார் அந்த பெண்ணியவாதி.

மற்ற நிறுவனப் பெண்களையும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தத் தினமும் அவர்கள் அலுவலகம் சென்று தன்னைப் புகைப்படமெடுத்து தாங்கள் கொடுத்துள்ள எண்ணிற்கு அனுப்பி வைத்தால் அன்றைய நாளுக்கான பணம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Loading...

இந்த கண்கவர் ஸ்கீம் வெறும் ஜூன் மாதம் இறுதிவரைக்கும் என்பதையும் கீழே கடைசியாகக் குறிப்பிட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...