கலர்ஸ் நட்சத்திரங்களுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மெய்நிகர் யோகா தினம்..

மெய்நிகர் யோகா தினம்

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பயனளிக்கும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக யோகா இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

 • Share this:
  தமிழ்நாட்டின் மிக இளமையான  பொது பொழுதுபோக்கு (GEC) சேனலான கலர்ஸ் தமிழ், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை ஞாயிற்றுக்கிழமையன்று ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் உடன் இணைந்து ஒரு விரிவான விர்ச்சுவல் யோகா அமர்வை நடத்தி கொண்டாடியது. 

  “உலக ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்வானது, மனநல மற்றும் உணர்வுரீதியிலான நலவாழ்விற்காக நமது தினசரி வாழ்க்கையில் யோகாவை நடைமுறையில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.  நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 200 நபர்கள் வெகு ஆர்வத்தோடு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தங்களது சொந்த வீடுகளில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருந்துகொண்டே தங்களுக்கு மிகவும் பிடித்த கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களோடு சேர்ந்து பார்வையாளர்கள் ஒவ்வொருவருமே இந்த யோகா ஆசனங்களை செய்தனர்.  1 மணி நேரம் நீடித்த இந்த மின்-யோகா நிகழ்வை பிரபல ஆயுர்வேத மருத்துவ மற்றும் விளையாட்டு துறைக்கான சிகிச்சை சிறப்பு மருத்துவரான டாக்டர். தர்மேஷ் குபேந்திரன், இயன்முறை மருத்துவரும் யோகா பயிற்றுனருமான டாக்டர். சிம்ரன்ஜீத் கவுர், தசைக்கூட்டு இயன்முறை மருத்துவரான டாக்டர். கிருஷ்ணா ஷா மற்றும் பிரபல விளையாட்டு சிகிச்சை சிறப்பு நிபுணரான திரு. சாகர் பூஜாரி மற்றும் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் தலைவர் திரு. சஞ்சய் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  "யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்" – சத்குரு

  உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பயனளிக்கும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக யோகாவின் இன்றியமையா பங்கை, குறிப்பாக மனஅழுத்தம் நிறைந்த இந்த காலகட்டத்தில், வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு தொகுத்து வழங்கப்பட்டது.  இந்த மின்-யோகா நிகழ்வில் சித்து மற்றும் ஷ்ரேயா உடன் திருமணம் தொடரிலிருந்து டீனா மற்றும் ரைஷா, இதயத்தை திருடாதே தொடரிலிருந்து நிலானி, நவீன் மற்றும் பிந்து, மாங்கல்ய தோஷம் தொடரிலிருந்து அருண், லட்சுமி மற்றும் கீர்த்தி, ஓவியா தொடரிலிருந்து சுரேந்தர் மற்றும் ஹர்ஷலா ஹனி, அம்மன் தொடரிலிருந்து அமல்ஜித், பவித்ரா, நரேன் பாலாஜி மற்றும் சாய் லட்சுமி, உயிரே தொடரிலிருந்து அம்ருத் கலாம் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்த யோகா அமர்வில் பங்கேற்று இந்நிகழ்வை பல நட்சத்திரங்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் நிகழ்வாகவும் மற்றும் அர்த்தமுள்ள யோகா தின அனுசரிப்பாகவும் ஆக்கினர்.
  Published by:Sivaranjani E
  First published: