பூமி என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. பல கோடிக்கணக்கான உயிர்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும், மனிதர்களையும் அது ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தவறினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழு தங்களது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உலகில் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பான அபாயங்கள் குறித்து நமக்கு விரிவாக எச்சரிக்கிறது. உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், "உணவுப் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள், மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின்தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக்கூடும்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கொரோனா வைரஸ் நெருக்கடியைப் போலவே காலநிலை மாற்றத்திற்கும் (climate change) உலகம் அதே அவசரத்துடன் செயல்பட வேண்டும், செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) கடந்த செவ்வாயன்று கூறியது, புவி வெப்பமடைதல் கோவிட் -19 ஐ விட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்டுள்ளது. பூமியை தொற்றுநோய் சூழ்ந்திருந்தாலும், காலநிலை மாற்றம் அழிவை ஏற்படுத்துவதில் இருந்து விடுபடவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், 1960 களில் இருந்து ஏற்பட்ட உலகளாவிய பேரழிவுகள் குறித்து, ஜெனீவாவை தளமாகக் கொண்ட WHO, உலகம் 100 க்கும் மேற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது - அவற்றில் பல காலநிலை தொடர்பானவை என்றது. உலக சுகாதார அமைப்பு மார்ச் மாதத்தில் தொற்றுநோயை அறிவித்ததிலிருந்து உலகெங்கிலும் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
IFRC பொதுச்செயலாளர் ஜெகன் சபகெய்ன் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் "நிச்சயமாக, கோவிட் வைரஸ் நம்மிடையே இருக்கிறது, அது நமக்கு முன்னால் ஓய்வில்லாமல் இருக்கிறது, அது நம் குடும்பங்களையும், நம் நண்பர்களையும், நம் உறவினர்களையும் பாதிக்கிறது" என்று தெரிவித்தார். "இது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக மிக நெருக்கடியான சூழ்நிலை" என்றும் இது ஏற்கனவே 1.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது என்றும் அவர் கூறினார்,
ஆனால் "காலநிலை மாற்றம் என்பது மனித வாழ்க்கையிலும் பூமியிலும் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று IFRC எதிர்பார்க்கிறது என்று அவர் எச்சரித்தார். கோவிட் -19 க்கு எதிராக ஒன்று அல்லது பல தடுப்பூசிகள் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், "துரதிர்ஷ்டவசமாக காலநிலை மாற்றத்திற்கான தடுப்பூசி எதுவும் இல்லை" என்று சபகெய்ன் கூறினார்.
காலநிலை மாற்றத்திற்கு தடுப்பூசி இல்லை :
புவி வெப்பமடையும்போது, "இந்த பூமியில் மனித உயிர்களை உண்மையில் பாதுகாக்க இன்னும் நீடித்த நடவடிக்கை மற்றும் முதலீடு தேவைப்படும்" என்று அவர் எச்சரித்தார். சமீபத்திய தசாப்தங்களில் தீவிர வானிலை மற்றும் காலநிலை தொடர்பான நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் (frequency and intensity) ஏற்கனவே கணிசமாக அதிகரித்துள்ளது என்றுது IFRC.
2019ம் ஆண்டில் மட்டும், உலகம் 308 இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, இதில் 77 சதவீத காலநிலை அல்லது வானிலை தொடர்பானது மேலும் இதனால் சுமார் 24,400 பேர் கொல்லப்பட்டனர். 1960 களில் இருந்து காலநிலை மற்றும் வானிலை தொடர்பான பேரழிவுகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது, 1990 களில் இருந்து கிட்டத்தட்ட 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று IFRC தெரிவித்துள்ளது.
மோசமான ஒரு கொடிய வளர்ச்சி :
கடந்த தசாப்தத்தில் வானிலை மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் 410,000 க்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் ஏழ்மையான நாடுகளில், வெப்ப அலைகள் மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. "நம் நீண்டகால வாழ்வை இவைகள் உண்மையில் அச்சுறுத்தும்" இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட IFRC சர்வதேச சமூகத்திற்கு தேவையான அவசரத்துடன் செயல்பட அனைவருக்குமான அழைப்பை விடுத்துள்ளது.
Also read... வெறுப்பு மற்றும் விரோத மனப்பான்மை இதயத்தை பாதிக்கும்: ஆய்வில் பகீர் தகவல்!
மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல்: -
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப 50 வளரும் நாடுகளுக்கு உதவ அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று அது மதிப்பிட்டுள்ளது. IFRC அந்த தொகை "கோவிட் -19 இன் பொருளாதார தாக்கத்திற்கான உலகளாவிய பதிலால் சுருங்கிவிட்டது" என்று கூறியிருந்தது, இது ஏற்கனவே 10 டிரில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. காலநிலை மாற்றம் தடுப்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றில் இதுவரை முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும்பகுதி வளரும் நாடுகளுக்கு அதிக ஆபத்தில் இல்லை என்றும் அது கூறியது.
"நம் முதல் பொறுப்பு, காலநிலை அபாயங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதாகும்" என்று சபகெய்ன் எச்சரித்தார், "உலகமே இதைச் செய்ய தவறிவிட்டது என்பதை எங்கள் ஆராய்ச்சி நிரூபிக்கிறது" என்றும் "காலநிலை ஆபத்து மிகப் பெரியது மற்றும் காலநிலை தழுவல் நிதி எங்கு செல்கிறது என்பதற்கு இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது," என்று அவர் கூறினார். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலக அளவில் நிகழ்ந்துள்ள கடல் அளவு மாறுபாடுகள் வருத்தப்படக்கூடியவை அரசுகள் துரிதமாக செயல்பாட்டாலொழியா மாற்றம் ஏற்படும் இல்லையேல் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change, Climate Change Projects, Environment, Greenhouse gas, National Green Tribunal, Ozone