சிகரெட் துண்டுகள் மண் வளத்தைப் பாதிக்கும் : ஆய்வில் தகவல்

பலரும் சிகரெட் பிடித்தவுடன் வீசப்படும் துண்டுகள் மண்ணில் மட்கும் தன்மைக் கொண்டது என்று நினைக்கின்றனர். அது மிகவும் தவறு.

news18
Updated: July 23, 2019, 10:32 PM IST
சிகரெட் துண்டுகள் மண் வளத்தைப் பாதிக்கும் : ஆய்வில் தகவல்
சிகரெட் துண்டுகள்
news18
Updated: July 23, 2019, 10:32 PM IST
சிகரெட் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திவந்தாலும் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் சளைக்காமல் சிகரெட் குறித்த தீமைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 4.5 ட்ரில்லியன் சிகரெட் துண்டுகள் மண்ணில் வீசப்படுகிறது. இவை பிளாஸ்டிக் மண்ணில் புதைந்து சேதத்தை ஏற்படுத்துவதற்கு சமமாகக் கருதப்படுகிறது. அதுகுறித்து தற்போதும் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

அங்கியா ரஷ்கின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சிகிரெட் தூள் நிலத்தில் தூவப்படுவதாலும், சிகரெட் துண்டுகளை மண்ணில் வீசுவதாலும் அந்த நிலத்தின் மண், தாவரங்கள் வளரும் தன்மையை கணிசமாக இழக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான சிகெரெட்டு முனைகள் செல்லுலோஸ் அசிடேட் ஃபைபர் என்று சொல்லக் கூடிய பையோ பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன. பலரும் சிகரெட் பிடித்தவுடன் வீசப்படும் துண்டுகள் மண்ணில் மட்கும் தன்மைக் கொண்டது என்று நினைக்கின்றனர். அது மிகவும் தவறு. இந்த பயோ பிளாஸ்டிகானது மண்ணில் புதைக்கப்பட்டால் அது மட்க பல வருடங்கள் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிகரெட்டைப் பிடித்து எரிந்தாலோ, அப்படியே எரிந்தாலோ பாதிப்பு மண்ணிற்குதான் என்கிறது. ஒருவேலை அந்த மண்ணில் தாவங்கள் விளைந்தாலும் அது ஆரோக்கியமானதாக வளராது. வளரும்போதே இறப்பை எதிர்பார்த்தே வளரும். அவை ஊனமுற்ற தாவரமாகவே வளர்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

”நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. கெமிக்கல்கள் நிறைந்த அந்த சிகரெட் முனைத் துண்டுகளை மண்ணில் வீசும்போது அந்தப் பகுதி மண் தாவரங்கள் வளர்வதற்கான தன்மையைக் கணிசமான முறையில் இழக்கின்றன என்பதே உண்மை” என்கிறார் ஆராய்ச்சியாளர் பாஸ் பூட்ஸ்.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...