டிசம்பர் மாதத்தின் கொண்டாட்டம் இறுதியாக வந்துவிட்டது என்பது போல் எங்கு திரும்பினாலும் மின்னும் நட்சத்திரங்களோடு கிறிஸ்துமஸ் திருவிழா களைகட்டி கொண்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், கேக்குகள், சிறப்பு வழிபாடுகள், கொண்டாட்டங்கள் என்று உலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா.. ஹேப்பி கிறிஸ்துமஸ் என்று ஒரு சிலர் சொல்கின்றனர்.. சிலர் மெர்ரி கிறிஸ்துமஸ்(Merry Christmas ) என்கின்றனர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று ?
இரண்டு சொற்களின் அர்த்தங்களையும் கூகுள் செய்தால், அவை அடிப்படையில் ஒரே பொருளைத் தான் குறிக்கின்றன. "மெர்ரி" என்ற சொல்லுக்கு "மகிழ்ச்சியாகவும் கலகலப்பான " என்று ஆக்ஸ்போர்டு அகராதி அர்த்தத்தைச் சொல்கிறது. ஹேப்பி (happy ) என்றால் மகிழ்ச்சி என்பதை நாம் அறிவோம். அப்படி இருக்கையில் எதை சொல்வது சரி?
உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!
இரண்டுமே சரி தான். எதை சொன்னாலும் தவறில்லை. ஆனால் அதன் தோற்றமும் பயன்படுத்தும் களமும் தான் அதை வேறுபடுத்தி காட்டிவந்துள்ளது. உண்மையில் இந்த இரண்டு விதமான வாழ்த்து முறைகள் எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஊகங்களும் கதைகளும் தான் அதை விளக்குகின்றன.
இங்கிலாந்தில் ஒரு பழக்கம் இருந்தது. இன்றும் இருக்கிறது. அதன்படி "ஹேப்பி கிறிஸ்துமஸ்" என்பது உயர்ந்த சமூக வகுப்பினருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அவர்களின் கொண்டாட்ட நிலையை வைத்து இது அமைக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்தில் வாழும் சாதாரண மக்களது கொண்டாட்டம் “மெர்ரி கிறிஸ்துமஸ்” என்றே வழங்கப்படுகிறது.அரச குடும்பத்தை சேர்ந்த எலிசபெத் ராணி ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களுக்கு "ஹேப்பி கிறிஸ்துமஸ்” என்று தான் வாழ்த்துவாராம்.
வரலாற்றுப்படி 1500 களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கில கரோலில் "விஷ் யூ எ மெர்ரி கிறிஸ்துமஸ்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1534 ஆம் ஆண்டு பிஷப் ஜான் ஃபிஷர் ஹென்றி VIII இன் முதல்வர் தாமஸ் குரோம்வெல்லுக்கு எழுதிய கடிதத்தில் "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்ற சொற்றொடர் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல 1843 இல் சார்லஸ் டிக்கன்ஸின் எ கிறிஸ்மஸ் கரோலின் வெளியீட்டில், "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்ற சொற்றொடர் கவனம் பெற்றது. அந்த ஆண்டு தான் வணிக ரீதியாக முதல்முறை கிறிஸ்துமஸ் அட்டையிலும் இந்த சொற்றொடர் அச்சிடப்பட்டது.
ஆனால் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், இரண்டு முறை வாழ்த்து தொடர்களும் உருவாகி, அர்த்தங்களை மாற்றியதால், மக்கள் படிப்படியாக "மெர்ரி" என்ற தனி வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். ஹேப்பி என்பதை சொல்வதை கவுரவம் என்று நினைத்தனர்.
Christmas - புதுச்சேரியில் கப்ஸ் தேவாலயத்தில் மூன்று மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை...
அதேபோல் ஒப்பீட்டளவில் அமெரிக்கர்கள் மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லும் வழக்கம் குறைந்து கொண்டே வந்தது. 2005 இல் பாதி மக்கள் தொகையாக இருந்தது 2017 இல், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் (32%) பயன்படுத்தும் நிலையாக மாறியது. அதன் தொடர்ச்சியாக உலக நாடுகளும் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வழக்காடலை மறந்துவிட்டனர். அவ்வப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் வந்தாலும் ஹேப்பி கிறிஸ்துமஸ் என்பது பரவலாக பயன்படுத்த படுகிறது.
இதை மாற்றி எளியவர்களுக்காக "நான் ஜனாதிபதியானால், ஒவ்வொரு கடையிலும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்று கூறுவோம்," என்று 2015 இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார். மேலும், 2016 இல் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, 'மெர்ரி கிறிஸ்துமஸ்' மீண்டும் உயிர்பெற்றது
இன்றும் முன்னோக்கிய எண்ணம் கொண்ட மேற்கு மற்றும் வடகிழக்கு நாடுகள், "ஹேப்பி கிறிஸ்துமஸ்" என்பதை விரும்புகின்றன. பழமைவாத மத்திய மேற்கு மற்றும் தெற்கு நாடுகள், "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்பதை இன்னும் பயன்படுத்துகிறது.
வார்த்தை எதுவாக இருந்தாலும் கொண்டாட்டத்திற்கு குதூகலத்திற்கும் எந்த குறைவும் கிடையாது. எல்லாமே மகிழ்ச்சிகரமான கொண்டாட்ட திருவிழாதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas