உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிமாறும் இந்நாள் ஏன் டிசம்பர் மாதம் 25 ல் கொண்டாடப்படுகிறது? இதன் வரலாறு என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்..
கிறிஸ்துமஸ் வரலாறு…
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்துவின் மாஸ்( அல்லது இயேசு) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்த தேதி இதுவரை தெரியவில்லை. இருந்தப்போதும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி என்று முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து பிற்காலத்தில் உலகளவில் இந்நாளில் இப்பண்டிகை கொண்டாடலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதோடு இந்நாளில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் மரம் எப்போது வைக்க ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான தேதி என்பது தெளியாவ இல்லை என்றாலும், ஃபிர் மரங்களை ஆப்பிள்களால் அலங்கரிக்கும் முதல் நிகழ்வு என்பது கடந்த 1605 ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் நடந்ததாக வரலாறு கூறுகிறது. இதே போல் இந்நாளில் மெழுகுவர்த்திகளை முதன் முதலில் பயன்படுத்தி 1611 ல் சிலேசிய டச்சஸ் மூலம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதோடு 9 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பரவலாகக் கொண்டாடப்படத் தொடங்கினாலும், மற்ற இரண்டு முக்கிய கிறிஸ்துவ விடுமுறை நாள்களின் வழிபாட்டு முக்கியத்துவத்தை அது அடையவில்லை. இருந்தப் போதும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றன. அதே நேரத்தில் புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் டிசம்பர் 24 மாலையே மெழுகு வர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்குகின்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..
இந்துக்களுக்கு எப்படி தீபாவளியை வெகுவிமர்சியாக கொண்டாடுகிறார்களோ? அதே போன்று தான் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு பிறந்த தினமாக கிறிஸ்துமஸ். புத்தாடைகள் அணிந்து இரவில் மாஸில் கலந்துக் கொள்வார்கள். இறைவனுக்கு பிடித்த பாடல்கள் பாடுவது, வீடுகளில் குடிகளில் அமைப்பதோடு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இந்நாளை மகிழ்வோடு கொண்டாடுவார்கள்.
Also Read : Christmas 2022 | குறைந்த செலவில் வீட்டில் இடத்தை அடைக்காத DIY கிறிஸ்துமஸ் ட்ரீ.!
கிறிஸ்துமஸ்: முக்கியத்துவம்
கடவுளின் மகனாக கருதப்படும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் குறிப்பது மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எப்படி வாழ்க்கையில் முன்னோக்கி பயணித்தார் என்பது குறித்து நினைவுக்கூரும் நாளாக டிசம்பர் 25 ஆம் தேதி பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கியநாளாக இது அமைகிறது என நம்புகின்றனர் கிறிஸ்துவ மக்கள். இப்பண்டிகைக் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் மற்றும் வரலாறுகள் இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு இந்நாள் என்றாலே கேக்குகள் தான் முதலில் நினைவுக்கு வரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Christmas eve