ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..? விளக்கும் ஆய்வு

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..? விளக்கும் ஆய்வு

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..?

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா..?

பொதுவான உணவுப் பொருட்களில் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால்தான் பருக்கள் ஏற்படும் என்று கூறப்படும். ஆனால் சாக்லேட் கூட பருக்களை உண்டாக்கும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சாக்லேட் என்பது அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் ஒரு சுவை. இது குழந்தை பருவத்தில் தொடங்கி, ​​டீன் ஏஜ் வயது கடந்து முதுமையிலும் சாக்லேட் மீதான ஆசை குறையாது. அதேசமயம் அதிக சாக்லெட் சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். அந்த வகையில் டீனேஜ் பருவத்தில் அதிக சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  பொதுவான உணவுப் பொருட்களில் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால்தான் பருக்கள் ஏற்படும் என்று கூறப்படும். ஆனால் சாக்லேட் கூட பருக்களை உண்டாக்கும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சாக்லெட்டில் உள்ள பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் சாக்லேட்டின் பக்க விளைவு பருக்களை அதிகரிக்கிறது.

  CNN அறிக்கையின்படி, க்ளீவ்லேண்ட் மெடிக்கல் சென்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் கிரிகோரி ஆர். டெலோஸ்ட், "சாக்லேட் சாப்பிடுவதால் பருக்கள் வரக்கூடும் என்று எங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.அதுவும் 5க்கும் மேற்பட்ட பருக்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார். 5 பருக்கள் என்பது ஒன்றும் இல்லை என்று சிலர் நினைப்பார்கள், ஆனால் இந்த பருக்கள் வெடித்த பிறகு, அது அதிகமாக பரவும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரிக்கிறார்.

  ஏற்கனவே பருக்கள் இல்லாதவர்கள், சாக்லேட் அதிகமாக உட்கொண்டால், அவர்களுக்கும் பருக்கள் வரலாம் என்று டாக்டர் கிரிகோரி கூறினார். ஆனால், மில்க் சாக்லேட் கொடுத்தவர்களுக்கு பருக்கள் பிரச்னை வரவில்லை. ஆனால் பால் மற்றும் சர்க்கரை கலந்த சாக்லேட்டை உட்கொண்டால், அது பிரச்சனையை மோசமாக்கியுள்ளது. எனவே இந்த ஆய்வின் அடிப்படையில் சாக்லேட் பருக்களை உருவாக்கும் என உறுதி செய்துள்ளது.

  Also Read : ஹோட்டல் உணவுகள் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கின்றன..? காரணம் இதுதான்

  ஆனால் தாய்லாந்தில் உள்ள பாங்காக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரவித் அஸ்வனோடா தனது ஆய்வின் அடிப்படையில் பருக்களுக்கு சாக்லேட் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். பருக்கள் வருவதற்கு பல காரணிகள் இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். உணவு, மரபணுக்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல காரணிகள் இதற்குக் காரணம் என்கிறார்.

  எவ்வாறாயினும், டாக்டர் அஸ்வனோடா தனது ஆய்வில், டார்க் சாக்லேட் நுகர்வு புண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 'முகப்பருவை' அதிகரித்ததாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், பருக்கள் வருவதற்கான ஆபத்து இல்லாதவர்கள் அல்லது வயது அதிகரித்தவர்கள், சாக்லேட் சாப்பிடுவது பருக்களை அதிகரிக்குமா என்பதையும் ஆய்வு தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும் சாக்லேட் பருக்களை உருவாக்கும் என்ற உறுதியான ஆய்வு இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Acne, Chocolate