சிறுவர்கள் டிவி, செல்ஃபோன் பார்ப்பதைவிட ஓடி ஆடி விளையாடுவதுதான் ஆரோக்கியம் : உலக சுகாதார அமைச்சகம் தகவல்

ஒரு வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்குக் கட்டாயம் டி.வி , செல்ஃபோன் போன்ற திரைகளைக் காண்பிக்கக் கூடாது

news18
Updated: May 1, 2019, 7:05 PM IST
சிறுவர்கள் டிவி, செல்ஃபோன் பார்ப்பதைவிட ஓடி ஆடி விளையாடுவதுதான் ஆரோக்கியம் : உலக சுகாதார அமைச்சகம் தகவல்
சிறுவர்கள் டிவி, செல்ஃபோன் பார்ப்பதைவிட ஓடி ஆடி விளையாடுவதுதான் ஆரோக்கியம்
news18
Updated: May 1, 2019, 7:05 PM IST
குழந்தை வளர்ப்பு என்பது டெக்னாலஜிகளால் சுலபமாவிவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் சிறுவர்கள் அல்லது குழந்தைகள் அடம் பிடித்தாலோ அழுதாலோ உடனே செல்ஃபோன் அல்லது மற்ற கேட்ஜெட்டுகளை கையில் கொடுத்து அவர்களை நொடியில் சமாதானம் செய்துவிடுகிறார்கள்.

ஆனால் அது எவ்வளவு பெரிய ஆபத்து, அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதில்லை. பிள்ளைகள் எங்கும் சுற்றாமல் ஓரிடத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதாலும், கணினி பார்ப்பதாலும் தங்களுடைய வேலை சுலபமாகிவிட்டது என்றே கருதுகின்றனர்.

ஆனால் உலக சுகாதார அமைச்சகம் அவ்வாறு பெற்றோர்கள் செய்வது தவறு என்கிறது. மேலும் பிள்ளைகள் டி.வி, கணினி, இதர கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் ஓடி ஆடி விளையாடுவதால்தான் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்கிறது.


சிறுவர்கள் அதிக நேரம் அமர்ந்து ஒரு கேட்ஜெட்டில் மூழ்கியிருப்பது அவர்களின் வளர்ச்சியைச் சிதைக்கும் எனவும் எச்சரிக்கிறது. அவர்கள் ஓடி விளையாடுவதன் மூலமாக அவர்களின் மூளை சுறுசுறுப்பையும், அதிக செயல் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். நன்றாக ஆழ்ந்து தூங்குவார்கள் என்கிறது. அவ்வாறு தூங்கும்போது வளர்சிதை மாற்றங்கள் தூண்டப்பட்டுச் செயல்பட ஏதுவாக இருக்கும். அவர்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறது.

அப்படியே அவர்கள் கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதாக இருந்தால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பார்க்கக்கூடாது என்கிறது. ஒரு வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்குக் கட்டாயம் டி.வி, செல்ஃபோன் போன்ற திரைகளைக் காண்பிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறது. 2 - 4 வயதான குழந்தைகள் கட்டாயம் உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகளை விளையாட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...