• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 12 முதல் 18 வயது குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம்.. மருத்துவர்கள் தகவல்

12 முதல் 18 வயது குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம்.. மருத்துவர்கள் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்றாலும் அவர்களில் 12 முதல் 18 வயது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
    தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டு பாதிக்கப்படும் குழந்தைகளில் சுமார் 50% 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.

    மார்ச் மாதத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 2,530 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 1,258 பேர் 12 முதல் 18 வயதிலான குழந்தைகள் ஆவர். ஏப்ரல் மாதத்தில் 20 ஆயிரத்து 27 குழந்தைகள் 18 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 10,441 பேர் 12-18 வயது பிரிவினர். மே மாதம் பாதிக்கப்பட்ட 71,555 குழந்தைகளில் 38,312 பேர் 12 வயது முதல் 18 வயது குழந்தைகள் ஆவர்.

    அதே போன்று ஜூன் மாதத்தில் பாதிக்கப்பட்ட 33,599 பேரில் 19,061 குழந்தைகள் 12 முதல் 18 வயது பிரிவினர் ஆவர். ஜூலை மாதம் 18 வயதுக்கு கீழ் 7,555 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3,678 குழந்தைகள் 12 முதல் 18 வயதினர். ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட 5,170 குழந்தைகளில் 2,252 பேர் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.

    குழந்தைகளில் கொரோனா வைரஸ் உடம்பில் ஒட்டிக் கொள்வதற்கான ACE ரிசப்டர் வளர்ந்திருக்காது என்ற காரணத்தால் தான் குழந்தைகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் 12 வயதுக்கு மேல் இந்த ரிசப்டர்கள் வளர தொடங்குவதால் 12 முதல் 18 வயது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம் என குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் கூறுகிறார்.

    Also read: மது உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா..? எச்சரிக்கும் ஆய்வு

    இது குறித்து மாநில குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை குழு உறுப்பினர் மருத்துவர் சீனிவாசன் கூறியதாவது, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெரியர்வர்களுக்கு ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படலாம். 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் கிடையாது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் தடுப்பூசிகள் எதுவும் கிடையாது.

    எனவே அவர்களுக்கான எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக் கூடும். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் 10 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: