சிக்குன்குனியா அறிகுறிகளும் தீர்வுகளும் என்ன..?

சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக நீர் அருந்துவது, பழச்சாறு என நீர் நிறைந்த பழங்களை உண்ணுங்கள்.

news18
Updated: August 20, 2019, 5:08 PM IST

கொசுக்கள் மூலம் மனிதனுக்குப் பரவும் தொற்றுகளால் உருவாகும் மற்றொரு நோய் என்றால் அது சிக்குன்குனியா. இந்த சிக்குன்குனியா மனிதர்களுக்கு வந்துவிட்டால் குறைந்தது 3 நாட்கள் வரை வாட்டி எடுக்கும். அப்படி உங்களுக்கும் சிக்குன்குனியா தாக்கம் இருந்தால் சில பாதுகாப்பு முதலுதவிகள் அவசியம்.

சிக்குன்குனியா தொற்று ஏற்பட்டிருந்தால் காய்ச்சல், மூட்டு வலிகள், கை, கால்கள் வீக்கம், அரிப்பு, சோர்வு, வாய்க் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு, இதயப் பிரச்னை என தீவிரமான நோய் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகுங்கள்.

சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக நீர் அருந்துவது, பழச்சாறு என நீர் நிறைந்த பழங்களை உண்ணுங்கள்.
சிக்குன்குனியா ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் மஞ்சள், இளநீர், இஞ்சி, துளசி, சூரிய காந்தி விதை மற்றும் தேன் போன்ற வீட்டுக் குறிப்புகள் மூட்டு வலிகள், உடல் சோர்வுகளைத் தவிர்க்க உதவும்.

சிக்குன்குனியா வராமல் தடுக்க கொசுக்களை ஒழிப்பதே ஒரே தீர்வு. அதற்கு வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கொசு வருவதற்குக் காரணமான பொருட்களை அப்புறப்படுத்துங்கள். மூலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.
First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...