செல்லப்பிராணிகளின் பதிவை இனி ஆன்லைனிலேயே செய்யலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கடந்த ஆண்டும் செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு 1200 ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 800 பதிவுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

செல்லப்பிராணிகளின் பதிவை இனி ஆன்லைனிலேயே செய்யலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
நாய்
  • News18
  • Last Updated: August 23, 2019, 3:46 PM IST
  • Share this:
வீட்டில் செல்லபிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்து உரிமம் வாங்குவதை இனி ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை சென்னை மாநாகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் குறைந்து வரும் செல்லப் பிராணிகளின் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை பதிவு செய்ய நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, திருவிக நகர், மீனம்பாக்கம், புளியந்தோப்பு ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 50 ரூபாய் பதிவுக் கட்டணமும் வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த ஊசியின் விலை தனியார் கிளினிக்குகளில் 600- 700 ரூபாய் வரை ஆகும்.

செல்லப்பிராணியின் பெயர், நிறம், ப்ரீட், வயது, வளர்ப்பவரின் பெயர் மற்றும் முகவரி, நோய் பிரச்னை என அனைத்தையும் உரிமப் படிவத்தில் பதிவு செய்வது கட்டாயம். அதுமட்டுமன்றி நாய்க்கு எந்த நோய் பிரச்னைகளும் இல்லை என மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும். இத்தனை வேலைகளை செய்து முடித்த பின்னரே செல்லப்பிராணியின் பதிவை உறுதி செய்ய முடியும். அதேபோல் ஒவ்வொரு வருடமும் நாய் வளர்ப்புக்கான உரிமத்தை புதுப்பித்தல் செய்வது கட்டாயம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டும் செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு 1200 ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 800 பதிவுகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த காரணத்திற்காக ஆன்லைன் பதிவைக் கொண்டு வந்துள்ளதாக கமால் ஹுசைன் (Kamaal Hussain) டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் கால்நடை அதிகாரியாவார்.

”நாங்கள் சென்னையில் உள்ள நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் பாதிப்புகளை கண்காணித்துகொண்டே இருப்போம். அதுகுறித்த தகவல்களை சேகரித்து வைத்து அதற்கு ஏற்ப தக்க நடவடிக்கைகள், திட்டங்களை மேற்கொள்வோம். ஆனால் இப்படி பதிவுகள் குறையும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் சிக்கல் உண்டாகிறது. இது கால்நடைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களின் பாதுகாப்பிற்கும் நல்லது. இதுகுறித்த விழிப்புணர்வு போதாமல் இருப்பதே இந்த அலட்சியத்திற்கான காரணமாக இருக்கிறது. இதை சரிசெய்யவே இந்த திட்டம்” எனவும் அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது இந்த ஆன்லைன் பதிவு அமலுக்கு வந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

Loading...First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...