• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக அன்னபிரசன்னம் செய்யப் போறீங்களா? நல்ல நேரம் மற்றும் நல்ல நாட்கள் இதோ!

பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக அன்னபிரசன்னம் செய்யப் போறீங்களா? நல்ல நேரம் மற்றும் நல்ல நாட்கள் இதோ!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை தெய்வங்களின் ஆசிகளோடு குழந்தைகளுக்கு ஊட்டுவது அன்னப்பிரசன்னம் எனப்படுகிறது.

  • Share this:
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் புனிதமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க கட்டத்திலும் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சில அனுசரிப்புகளை பாரம்பரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். சாஸ்திரங்களின்படி, மொத்தம் 16 இந்து சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அவற்றில் அன்னபிரசன்னம் நிகழ்ச்சியும் ஒன்று. இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் “அன்னபிரசன்னம்”. தமிழ் மொழியில் இதை சோறு ஊட்டும் சடங்கு என கூறுவர். குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் திட உணவு ஊட்டும் நிகழ்வை நடத்துவார்கள்.

மேலும் படிக்க.. குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய பங்கு..

அப்படி செய்ய முடியாவிட்டால் குழந்தை பிறந்த 8, 9 அல்லது 12-வது மாதங்களில் ஆடி, மார்கழி மாதங்களை தவிர்த்து பிற மாதங்களில் செய்யலாம். அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இச்சடங்கை வேதமறிந்த வேதியர்களை கொண்டும் செய்யலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை தெய்வங்களின் ஆசிகளோடு குழந்தைகளுக்கு ஊட்டும் இந்த அன்னப்பிரசன்னம் மற்ற சுப சடங்குகளை போலவே சுபமுகூர்த்த நாளில் செய்யப்பட வேண்டும். நக்ஷத்திரம், இராசி அடையாளம், கோள்களின் நிலை மற்றும் புதிதாகப் பிறந்தவரின் பிற விவரங்கள் ஆகியவற்றை கொண்டு சுபமுகூர்த்த நாள் கணக்கிடப்படும். அந்த நாளில், உற்றார் உறவினர் சூழ, குழந்தைக்கு அரிசி கொண்டு தயார் செய்யப்பட்ட பாயாசம் ஊட்டப்படுகிறது. அந்த சமயத்தில் குழந்தை நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றை பெற வேண்டும் என்று உற்றார் உறவினரால் ஆசீர்வதிக்கப்படுகிறது.

அன்னபிரசன்ன திதி குழந்தை பிறந்த 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எப்போது வேண்டுமானாலும் வரும். பஞ்சாங்கத்தின்படி, புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு இந்த விழா ஒற்றைப்படை மாதங்களிலும், ஆண் குழந்தைக்கு இரட்டைப்படை மாதங்களிலும் செய்யப்பட வேண்டும். இதன் பொருள், புதிதாகப் பிறந்த பெண் என்றால், அவளுடைய அன்னபிரசன்ன விழா குழந்தை பிறந்த 7, 9, அல்லது 11 வது மாதங்களில் கொண்டாடப்பட வேண்டும். பையனைப் பொறுத்தவரை, அது 6, 8, 10 மாதங்களில் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேற்சொன்னபடி அன்னபிரசன்ன விழாவைச் செயல்படுத்துவதற்கு நட்சத்திரம், திதி, நாட்கள் மற்றும் லக்கினம் ஆகியவை உள்ளன. அவற்றை பற்றி பின்வருமாறு காணலாம்.

திதி: த்விதியா, சுக்லா பக்ஷாவின் பூர்ணிமா திதி, பஞ்சமி, சப்தமி, திருதியை, சதுர்த்தி, துவாதசி, திரயோதசி , தசமி, மற்றும் ஏகாதசி.

நாட்கள்: திங்கள், புதன், வெள்ளி, வியாழன்.

நட்சத்திரம்: அன்னபிரசன்ன விழா குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் கீழ் கொண்டாடக்கூடாது. இருப்பினும், அஸ்வினி, புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி ஆகியவை மிருகசீர்ஷம் ஆகியவை புனிதமான நட்சத்திரமாக கருதப்படுகின்றன.

ஜூன் 2021 க்கான அன்னபிரசன்ன திதி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் இணக்கத்தன்மைக்கு கீழ்காணும் தேதிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்:

ஜூன் 23: புனித நேரம் காலை 5:24 மணிக்கு தொடங்கி காலை 7:00 மணிக்கு முடிகிறது.

ஜூன் 24: சுப் முஹுராத் மாலை 13:50 மணி முதல் 16:20 மணி வரை.

இதையும் படிங்க.. ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கு  காதணி விழா நடத்த நல்ல தேதி எப்போது?..


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: