ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களே உஷார்.! சானிட்டரி நாப்கினால் புற்றுநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பெண்களே உஷார்.! சானிட்டரி நாப்கினால் புற்றுநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சானிட்டரி பேடுகள்

சானிட்டரி பேடுகள்

பொதுவாக சாதாரண தோலை விட பெண்களின் பிறப்புறுப்பு என்பது அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். இது மற்ற தோல் செல்களை காட்டிலும் சுற்றி உள்ளதை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

இந்தியாவில் சானிட்டரி நாப்கின் பிராண்டுகளில் கேன்சர் மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக டில்லியைச் சேர்ந்த டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு படி 15-24 வயதுடைய பெண்களில் கிட்டத்தட்ட 64 சதவீதம் பேர் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகின்றனர். சராசரியாக பார்த்தல் 4 இல் ஒரு டீனேஜ் பெண்கள் சானிட்டரி நேப்கின்கள் பயன்படுத்துகிறார்.

சாதாரண துணி போன்ற ஆரோக்கியமற்ற வழிகளை பயன்படுத்தாமல் நேப்கின்களை பயன்படுத்த சொல்லி உலகம் முழுவதும் பிரச்சாரங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வரும் நிலையில் நேப்கின்களால் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : பப்பாளி முதல் அன்னாசி வரை... இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு குட்பை சொல்லும் டாப் 5 உணவுகள்..!

சர்வதேச மாசு ஒழிப்பு நெட்வொர்க்கின் ஒரு பகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க் இந்திய சந்தையில் விற்கப்படும் பிரபலமான 10 ஆர்கானிக் மற்றும் கனிம சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் அதன் ஆரோக்கிய நிலைகளையும் ஆய்வு செய்தது. அதில் இந்திய பேட்களில் தாலேட்டுகள் (Phthalates) மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள்- VOCகள் போன்ற நச்சு இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேடுகளில் பிளாஸ்டிக்கின் நெகிழ்வுத்தன்மை, வெளிப்படைத்தன்மை, பொருளின் ஆயுளை அதிகரிக்க தாலேட்டுகள் சேர்க்கப்படுகின்றன. பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் (NCBI) படி, தாலேட்டுகள் "பருவமடைதல், டெஸ்டிகுலர் டிஸ்ஜெனிசிஸ் சிண்ட்ரோம், புற்றுநோய் மற்றும் கருவுறுதல் குறைபாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சியை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தூண்டலாம்"

வேறு ஒரு அறிக்கையின்படி, "ஆஸ்துமா, கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி கோளாறு, மார்பக புற்றுநோய், உடல் பருமன், வகை II நீரிழிவு, குறைந்த IQ" போன்ற குறைபாடுகளும் தாலேட்டுகள் மூலம் ஏற்படுகின்றன.

சானிட்டரி பேட்களில் காணப்படும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOCs) நீண்டகாலம் பயன்படுத்தினால் கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், குமட்டல், சோர்வு, ஒருங்கிணைப்பு இழப்பு, தலைச்சுற்றல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதம் ஏற்படலாம். புற்றுநோயையும் உண்டாக்கும் என்று குறிப்பிடுகிறது.

இதையும் படிங்க:  ஷாம்புவில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இதை தெரிஞ்சுக்கிட்டு பயன்படுத்துங்க..!

பொதுவாக சாதாரண தோலை விட பெண்களின் பிறப்புறுப்பு என்பது அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். இது மற்ற தோல் செல்களை காட்டிலும் சுற்றி உள்ளதை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அப்படி இருக்கையில் சானிட்டரி பேட்களில் இருக்கும் இந்த நச்சுப்பொருள் உடலால் எளிதாக உறிஞ்சப்படும். அதன் விளைவாக கேன்சர் வர வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய பிராந்தியம் போன்ற இடங்களில் சானிட்டரி பேட்களுக்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையால் நிர்வகிக்கப்படுவதில்லை. BIS தரநிலைகளுக்கு உட்பட்டவை என்று கூறப்பட்டாலும் அவை ரசாயனங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று டாக்ஸிக்ஸ் லிங்கின் தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிதி மகேஷ் பாந்தியா கூறினார்.

இதற்கிடையில், இந்திய சானிட்டரி பேட்களின் சந்தை 2021 ஆம் ஆண்டில் 618.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியது. இந்த சந்தை 2022-2027 ஆம் ஆண்டில் 11.3 சதவீத சிஏஜிஆரை வெளிப்படுத்தி, 2027 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐஎம்ஆர்சி குழுமம் தெரிவித்துள்ளது.


Published by:Ilakkiya GP
First published:

Tags: Sanitary Napkin