• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புற்றுநோயின் பல்வேறு நிலைகள்....! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

புற்றுநோயின் பல்வேறு நிலைகள்....! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Cancer | புற்றுநோயின் நிலைகளை கண்டறிவது அதன் தீவிரம் மற்றும் புற்றுநோயின் வளர்ச்சி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முக்கியமான ஒன்றாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியின் தரம் மற்றும் நிலைகளின் அடிப்படையில் புற்றுநோயை வரையறுக்கலாம். நாம் கேட்கும் முதல் தடவையில் புற்றுநோய் ஆபத்தானது என்று தோன்றினாலும், கட்டியின் வளர்ச்சியின் அதன் வெவ்வேறு நிலைகளை புரிந்துகொள்வதன் மூலம் அது எவ்வளவு ஆபத்தானது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதனை தீர்மானிக்க கட்டியின் அளவு மற்றும் அது உருவாகிய இடத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளதா என்ற தகவல்கள் உதவுகின்றன.

    புற்றுநோயின் நிலைகளை கண்டறிவது அதன் தீவிரம் மற்றும் புற்றுநோயின் வளர்ச்சி குறித்த தகவல்களை நாம் நமக்கு தெரிந்து கொள்ள முக்கியமான ஒன்றாகும். புற்றுநோய் நிலை 1 முதல் 4 வரையிலான நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமும் புற்றுநோய் கட்டி மற்றும் உடலின் எந்த பாகத்தில் உருவாகியுள்ளது என்பது குறித்த விரிவான தகவல்களை அடிப்படையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கும் போதும் புற்றுநோயின் தீவிரமானது அதிகமாகிறது

    புற்றுநோய் நிலைகளை புரிந்துகொள்வதற்கான முக்கிய காரணங்கள் :

    சிகிச்சை : புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என்பது தெரிந்தால் சிகிச்சை அளிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். இது புற்றுநோயை குணப்படுத்த தேவையான சிகிச்சையை தீர்மானிக்க மருத்துவருக்கு உதவுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை தேவை உள்ளதா அல்லது கீமோதெரபி போதுமானதா என்று அறியலாம்.

    புற்றுநோயிலிருந்து குணமாக : புற்றுநோயிலிருந்து குணமாகுவது என்பது எந்த நிலையில் நாம் புற்றுநோயை கண்டுபிடிக்கிறோம் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்விரைவில் குணமாக சாத்தியம் உள்ளது.

    ஆராய்ச்சி: புற்றுநோயின் நிலைகளை கண்டறிவது மிகவும் பயனுள்ள சிகிச்சைகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. இந்த ஆராய்ச்சியின் பொது முந்தைய நோயாளிகளின் தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி நடைபெறும்.

    புற்று நோயின் நிலைகள் :

    புற்றுநோய் கட்டிகளை பொறுத்து ஐந்து நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ரோமானிய எண்களுடன் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இரத்த புற்றுநோய்  லிம்போமா, மற்றும் மூளை புற்றுநோய் போன்ற பிற வகையான புற்றுநோய்கள் வெவ்வேறு நிலை அமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் அனைத்து நிலைகளும் புற்றுநோயின் ஆழத்தை தீர்மானிக்க உதவுகிறது.

    நிலை 0 : நிலை 0ல் தற்போது வரை புற்றுநோய் செல்கள் உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் உடல் உறுப்புகளில் உள்ள அசாதாரண செல்கள் புற்றுநோய் உயிரணுக்களாக மாறும் ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடும். இது கார்சினோமா என்று அழைக்கப்படுகிறது.

    நிலை I : இது சிறிய அளவிலான புற்றுநோயை குறிக்கிறது. உடல் உறுப்பில் ஒரு பகுதியில் மட்டுமே உருவாகியிருக்கும். இந்த நிலை பெரும்பாலும் புற்றுநோயின் ஆரம்ப கட்டமாக அழைக்கப்படுகிறது.

    நிலை II: புற்றுநோய் முதல் கட்டத்தை விட பெரிதாக வளர்ந்துள்ளது என்பதை நிலை II குறிக்கிறது. ஆனால் அது மற்ற பகுதிக்கு பரவவில்லை.

    நிலை III : ஒருவருக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருந்தால், பெரிய அளவில் புற்றுநோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. மேலும் இந்த நிலையில் புற்றுநோய் கட்டிக்கு அருகிலுள்ள பகுதிக்கும் பரவியுள்ளது என்பதை குறிக்கிறது.

    நிலை IV : நிலை IVல் புற்றுநோய் இருந்தால் மேம்பட்ட அல்லது மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் என்று அழைக்கப்படும். இந்த நிலையில் புற்றுநோய் கட்டியானது பிற உடல் பாகங்களுக்கும் பரவி இருக்கும். இது தான் இறுதிக்கட்டமாக உள்ளது.

    புற்றுநோயின் தரங்கள் :

    ஒரு நுண்ணோக்கில் பார்க்கும் போது காணும் புற்றுநோய் செல்களின் தோற்றத்திற்கு ஏற்ப புற்றுநோயின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. குறைந்த தரம் மெதுவாக வளரும் புற்றுநோயை குறிக்கிறது, அதே சமயம் உயர் தரம்  வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் செல்களை குறிக்கிறது.



    தர நிர்ணய முறைகள் :

    தரம் 1: புற்றுநோய் செல்கள் சாதாரண செல்கள் போல இருக்கும், அது வளராது.

    தரம் 2: இதில் புற்றுநோய் செல்கள் சாதாரண செல்கள் போல இருக்காது. இந்த தரத்தில் புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும்.

    தரம் 3: புற்றுநோய் செல்கள் அசாதாரணமானவாக காணப்படும். மேலும்  அந்த செல்கள் அது வளரலாம் அல்லது தீவிரமாக மற்ற உறுப்புகளுக்கு பரவவும் வாய்ப்புள்ளது.

    உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மற்றும் அறிவுறுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது புற்றுநோயின் விவரங்களை கண்டுபிடித்து சிறந்த சிகிச்சை பெற மிகவும் உதவியாக இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: