Home /News /lifestyle /

இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுவது சாத்தியமா..? ஆய்வில் வெளியான சுவாரஸ்யம்...

இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுவது சாத்தியமா..? ஆய்வில் வெளியான சுவாரஸ்யம்...

இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுவது சாத்தியமா..?

இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுவது சாத்தியமா..?

ஒரு உயிர் இறந்து ஒருசில மணி நேரங்களில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறது இன்றைய அறிவியல். நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியம் என்று அறிவியல் விவரிக்கிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இறந்து போன ஒரு உயிரை மீட்டு கொண்டு வர முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதெப்படி சாத்தியம்? இறப்பு என்பதே இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் நின்று போனதன் அர்த்தம் தானே! இந்த இரண்டு உறுப்புகள் ஓய்வின்றி இயங்குவதில் தானே உயிர்நாடி இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு உயிர் இறந்து ஒருசில மணி நேரங்களில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறது இன்றைய அறிவியல். நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியம் என்று அறிவியல் விவரிக்கிறது என்பதையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.

பன்றியை வைத்து ஆராய்ச்சி

இறந்த உயிரை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சியை பன்றியை வைத்து மேற்கொண்டுள்ளனர் விஞ்ஞானிகள். பன்றி இறந்து முழுமையாக ஒரு மணி நேரம் கழித்து செல்கள் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை புதுப்பிக்க முடிந்தது என்றும், மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வர முடிந்தது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மெடிஸின் என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வு கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட பிறகு, அது தொடர்பான கட்டுரை ‘ஜர்னல் நேச்சர்’ என்ற இதழில் வெளிவந்திருக்கிறது.



மனிதர்களுக்கு பயன்படும்

யேல் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் எந்த வகையில் மனிதர்களுக்கு பயன்படும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவரது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும், உறுப்புக் கொடை வழங்கும் நபர்களின் உறுப்புகளை லைவ்-வாக வைத்திருப்பதற்கான நேர நீட்டிப்பிற்கும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

இதுகுறித்து யேல் பல்கலைக்கழகத்தின் துணை ஆய்வு விஞ்ஞானி மற்றும் இந்த ஆய்வுக் குழுவின் இணை வழிகாட்டி டேவிட் ஆண்ட்ரிஜேவிக் கூறுகையில், “அனைத்து செல்களும் உடனடியாக இறந்து விடுவதில்லை. இதில் அடுத்தடுத்த தொடர்ச்சியான பல நிகழ்வுகள் இருக்கின்றன. இந்த தொடர்ச்சியான நடவடிக்கையில் நாம் இடைமறித்து அல்லது அதை நிறுத்தி சில செல்களின் இயக்கங்களை மீண்டும் கொண்டு வரலாம்’’ என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக யேல் பல்கலைக்கழகம் நடத்தியிருந்த மற்றொரு ஆய்வில், இறந்த பன்றியின் மூளையை மீண்டும் செயல்பட வைத்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாகவே தற்போதைய ஆய்வும் வெற்றி பெற்றுள்ளது.



ஆய்வு எப்படி நடைபெற்றது

மயக்க மருந்து செலுத்தப்பட்ட பன்றிகளுக்கு கார்டியாக் அரெஸ்ட் மூலமாக இறப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து, இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற கருவி கொண்டு பன்றியின் உடலில் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Death

அடுத்த செய்தி