• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய் உங்களுக்கான காதலை தேடித்தருமாம்..

நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய் உங்களுக்கான காதலை தேடித்தருமாம்..

காட்சி படம்

காட்சி படம்

 நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய் உங்களுக்கான காதலை தேடித்தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

  • Share this:
ஒரு டேட்டிங் தளத்தின் ஆய்வு படி, நீங்கள் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தால் உங்களுக்கான காதலை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளது. அதிலும், நீங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நாய் போன்ற விலங்குகளை மீட்டு வளர்ப்பவராக இருந்தால் உங்கள் காதலை கண்டுபிடிப்பது மிக எளிது என்று குறிப்பிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உலகளவில் ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் ஒருவர் டேட்டிங் மூலம் வருங்கால காதலை தேடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் டேட்டிங் ஆப்பில் நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் தங்களது காதலை எளிதில் கண்டுபிடித்து விடுவார்களாம். ஏனெனில் பலருக்கு நாய்கள் என்றால் அவ்வளவு விருப்பம். இதனை சர்வதேச நாய்கள் தினத்தன்று (ஆகஸ்ட் 26), OkCupid அதன் பயன்பாட்டில் உள்ள கேள்விபதில் தரவை பகிர்ந்துகொண்டு கூறியுள்ளது. அதில் நிபந்தனையற்ற அன்பைத் தேடும் மில்லினியன் (80 மற்றும் 90-களில் பிறந்தவர்கள்) டேட்டர்கள், நாய்கள் உதவியால் அவர்களின் சாத்தியமான துணையை தேடியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது அந்த ஆப்பில் டேட்டர்களால் பகிரப்பட்ட பதில்கள் மூலம், சுமார் 67% டேட்டிங் யூசர்கள் நாயை அதிகம் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள் அல்லது ஏற்கனவே நாயை வளர்த்து வருபவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ஆதரவின்றி இருக்கும் நாய்களை வளர்ப்பவர்கள் மீது டேட்டர்கள் ஒரு தனி மரியாதையையே வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளின் படி, டேட்டிங் ஆப்பில் இருக்கும் 81% யூசர்கள் ஆதரவற்ற விலங்குகளை மீட்டு வீட்டிற்கு அழைத்து வரும் நபருடன் டேட்டிங் செய்வதாகக் கூறியுள்ளனர்.

இதை மேலும் உறுதிப்படுத்த, 66% யூசர்கள் நாய் வளர்ப்பவரிடமிருந்து ஒரு நாயை விலைக்கு வாங்குவதை விட செல்லப்பிராணியை தத்தெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்த அபிமான விலங்குகள் ஒருவரின் அன்பைத் தேடுவதில் டேட்டர்களுக்கு எப்படி உதவ முடியும். இது குறித்து விளக்கம் அளித்த டேட்டிங் ஆப், 31% மில்லினியல்களுக்கு டேட்டிங் உரையாடலைத் தொடங்க செல்லப்பிராணிகளும் ஒரு காரணமாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. இலக்குகள், திட்டங்கள் மற்றும் விருப்பங்களைப் பற்றி பேசி டேட்டிங்-ஐ தொடங்குவது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். உண்மையில், செல்லப்பிராணி வளர்க்கும் நபர்கள் மிகவும் அன்பானவர்கள் என்று 53% யூசர்கள் கருதுகின்றனர்.



நியாயமாகச் சொல்வதானால், ஒருவரின் செல்லப்பிராணிகளுடன் அழகான 'குழந்தை குரலில்' பேசும் நபர் உணர்ச்சிகரமானவர் ஆவர். உங்களுக்கு ஏற்ற அன்பைத் தேட இந்த குணம் சிறந்த குணம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் உணர்கிறார்கள். பயனர்கள் இந்த நான்கு கால்களை கொண்ட ஜீவிகளிடையே மகிழ்ச்சியை உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் செல்லப்பிராணி அவர்களுக்கான காதலை தேடுவதில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மேலும் புரிந்து கொள்ள, OkCupid டேட்டிங் ஆப் அதன் யூசர்களிடம் பின்வரும் கேள்விகளை கேட்டுள்ளது.

Also read : ஒரே இரவில் கழிவறையை சுத்தப்படுத்த ஒரு பல் பூண்டு போதும்..எப்படி தெரியுமா..?

உங்கள் படுக்கையில் ஒரு செல்லப்பிராணியை தூங்க அனுமதிக்கிறீர்களா?

43% யூசர்கள் தங்கள் செல்லப்பிராணியை தங்களுடன் படுக்கையில் தூங்க அனுமதிப்பதாக கூறியுள்ளனர். 32% பேர் தங்கள் செல்லப்பிராணிகளை படுக்கையில் தூங்க வைப்பதை விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் ஒரு பூனை காதலரா அல்லது நாய் காதலரா?

OkCupid-டில் உள்ள பெரும்பாலான யூசர்கள் செல்லப்பிராணிகளை நேசிக்கிறார்கள். அதில் 41% பேர் நாய்களை விரும்புகிறார்கள். 26% பேர் நாய்கள் மற்றும் பூனைகள் இரண்டையும் நேசிப்பதாகக் கூறுகிறார்கள். 6% பூனைகளுக்கு தங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக இடம் உண்டு, 27% பேர் இரண்டுமே இல்லை என தெரிவித்துள்ளனர்.



 

நீங்கள் பெரிய நாய்களை விரும்புகிறீர்களா?

63% பயனர்கள் பெரிதாக வளரும் நாய்களை விரும்புவதாக பதிலளித்தனர். அதே நேரத்தில் 37% தங்கள் வாழ்க்கையில் சிறிய நாய்களை வளர்ப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு நாய் உங்கள் முகத்தை நக்கும்போது, ​​உங்கள் ரியாக்ஷன் என்ன?

42% பயனர்கள் 'ஐயோ, எவ்வளவு அருமை!' என்று பதிலளித்திருந்தனர்.

உங்கள் செல்லப்பிராணியை காப்பாற்ற எரியும் கட்டிடத்திற்குள் ஓடுவீர்களா?

59% பயனர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் செல்லப்பிராணியை மீட்பதற்கு விரைந்து செல்வோம் என்று கூறியிருந்தனர். 1% மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று கூறினர். 14% தங்கள் செயல்கள் கட்டிடம் எரியும் திறன் பொறுத்தது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த கேள்விக்கு பதிலளித்த 25% யூசர்கள் எங்களிடம் செல்லப்பிராணிகளே இல்லை என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: