• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • டாய்லெட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே செல்போனை பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா ?

டாய்லெட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே செல்போனை பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா ?

காட்சி படம்

காட்சி படம்

நம் வீட்டிலேயே மிகுந்த அசுத்தமான, மோசமான இடம் என்றால் அது பாத்ரூம் தான்.

 • Share this:
  இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் ஆறாம் விரலாக மாறியுள்ளது ஸ்மார்ட் ஃபோன்கள். செயற்கையாக நம்முடன் ஒட்டிக்கொண்டு வரும் இந்த ஆறாம் விரல் சார்ஜ் தீர்ந்து போய் நம்மை விட்டாலும், அதை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்தும் நாம் அதனை சிறிதும் விடுவதில்லை.

  தூங்கும் போது, சாப்பிடும் போது, பயணங்களின் போது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதும் ஏன் குளிக்கும் போதும் கூட சிலர் மொபைல் போன்களை விட்டு பிரியாமல் இருப்பர். ஸ்மார்ட் ஃபோன்கள் வருவதற்கு முன் தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களை விட்டால் செய்திகள். நிகழ்ச்சிகளை பார்க்க வேறு எதுவும் இருக்காது. எனவே காலைக்கடன்களை முடிக்க பாத்ரூம் போகும் போது சிலர் கூடவே பத்திரிகைகளை எடுத்து செல்வர்.

  இப்போது செய்தித்தாள்களுக்கு பதிலாக மக்கள் பாத்ரூம்களுக்கு எடுத்து செல்வது தங்களது உற்ற நண்பனான ஸ்மார்ட் ஃபோனை. இந்த செயலை செய்யும் பலர் குளியலறை அல்லது கழிப்பறைக்கு ஸ்மார்ட் ஃபோனை எடுத்து செல்வதை பற்றி அதிகம் யோசிப்பதில்லை. இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட உலகளாவிய செயலிகள் மூலம் டாய்லெட்டில் இருந்து கொண்டு உலக செய்திகளை தெரிந்து கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் சிறந்த வழியாக தோன்றினாலும், இந்த கழிப்பறை பழக்கம் தொற்றுநோய்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

  மோசமான இடம்:

  நம் வீட்டிலேயே மிகுந்த அசுத்தமான, மோசமான இடம் என்றால் அது பாத்ரூம் தான். அங்கு இல்லாத கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களே இருக்காது. எனவே ஸ்மார்ட் ஃபோனை அங்கு எடுத்து சென்று பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்துகளையும் ஏற்படுத்தும். கதவு, பைப்புகள் என கிருமிகள் நிறைந்திருக்கும் அங்கிருக்கும் பொருட்களை தொட்டு விட்டு, அதே கையுடன் தானே ஃபோனையும் பயன்படுத்துவோம். இதனால் எளிதில் தொற்று நமக்கு பரவும் அபாயம் ஏற்படுகிறது.

  also read : 40 வயதுக்கு மேல் பெண்கள் எடைக்கூட காரணம் இதுதானாம்..

  செல்ஃபோன்களில் கிருமிகள்:

  சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 95% சுகாதாரப் பணியாளர்களின் மொபைல் ஃபோன்கள் தொற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்களால் சூழப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு ஆய்வில், ஸ்மார்ட்போன்கள் டாய்லெட் பேசின்களை விட பத்து மடங்கு பாக்டீரியாக்களை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவும் நாம், மொபைல் ஃபோன்களை பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தம் செய்து கொண்டு சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்வதில்லை. இதன் விளைவாக நோயை உருவாக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

  மூலநோய் ஏற்பட வாய்ப்பு.!

  டாய்லெட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே உங்கள் மொபைல் ஃபோனை ஸ்க்ரோலிங் செய்வது உடல் ரீதியான நேரடி பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்து மொபைலை நோண்டுவதால் மூல நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  சராசரி நேரத்தை விட அதிகமாக கழிவறையில் போனை நோண்டியபடி செலவிடுவது, ஆசனவாய் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இடுப்பு பகுதியில் வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாத்ரூம் போகும்போது மொபைல் ஃபோனை வெளியே விட்டு செல்வது தான் சிறந்த வழி. தவிர்க்க முடியாமல் மொபைலை பாத்ரூமிற்கு எடுத்து செல்ல நேர்ந்தால், உங்கள் ஃபோனை ஆல்கஹால் கலந்த சானிட்டைசர்களை கொண்டு சுத்தம் செய்யுங்கள். மேலும் ஒருவர் அதிகபட்சம் கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் செலவிட கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: