• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பிணிகள் இஞ்சி சாப்பிடலாமா ? எப்போது..எப்படி..எந்த அளவில் சாப்பிட வேண்டும் ?

கர்ப்பிணிகள் இஞ்சி சாப்பிடலாமா ? எப்போது..எப்படி..எந்த அளவில் சாப்பிட வேண்டும் ?

காட்சி படம்

காட்சி படம்

மழைக்காலம், குளிர்காலங்களில் இஞ்சி டீ சூடாக குடிப்பது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். அதேசமயம் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

  • Share this:
    இஞ்சி மருத்துவ குணம் நிறைந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அவரசர உதவிக்கு பலரும் வீட்டில் இதைத்தான் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலம், குளிர்காலங்களில் இஞ்சி டீ சூடாக குடிப்பது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். அதேசமயம் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

    அதோடு செரிமாணத்தை அதிகரிக்கும், பித்தம் நீக்கும், வயிற்று உபாதைகளை சரி செய்யும்.. என பல வகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய இஞ்சி கர்ப்பிணிகளுக்கு நல்லதா..? அதை எந்த அளவில் , எப்போது சாப்பிட வேண்டும்..? உங்கள் குழப்பத்திற்கான விடை இதோ..



    இஞ்சி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இது முதல் ட்ரைமெஸ்டரில் வரும் வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு உதவும். அதோடு மட்டுமன்றி உடல் வலி, முதுகு வலி, கால் பிடிப்பு என கர்ப்ப காலத்தில் இருக்கும் இந்த அறிகுறிகளுக்கும் இஞ்சி நல்லது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் மகப்பேறு மருத்துவர் பந்திதா சின்ஹா கூறியுள்ளார்.

    Also Read : நெற்றியில் பொட்டு வைப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

    இஞ்சி நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. முதல் ட்ரைமெஸ்டரில் தேனுடன் கலந்து ஐந்து ml இஞ்சி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.அதிக அளவில் உட்கொள்கிறீர்கள் எனில் மலச்சிக்கல், உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் வரக்கூடும் என எச்சரிக்கிறார்.



    கர்ப்ப காலத்தில் இஞ்சி சாப்பிடுவது கரு கலைந்துவிடும் என்ற சந்தேகம் இருப்பது முற்றிலும் தேவையற்றது. அது வெறும் கட்டுக்கதை.. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்கிறார் மருத்துவர். இஞ்சி சாப்பிட நினைக்கும் கர்ப்பிணிகள் அதன் அளவில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். அதிக அளவில் சாப்பிடாமல் மிகச்சிறிய துண்டாக அதாவது ஒரு நாளைக்கு 5 ml உட்கொண்டால் போதுமானது என்கிறார். உணவிலும் அதிகமாக சேர்த்துக்கொள்ளாமல் இந்த அளவில் கவனமாக இருங்கள் என்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: