தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை தொட்டாலும், நாம் அதை எந்த அளவிற்கு புரிந்து கொண்டு நமது வாழ்க்கையில் அவற்றை பயன்படுத்துகிறமோ அதை பொறுத்து தான் நமது வாழ்வியல் அமையும். குறிப்பாக இன்று எல்லாவற்றிலும் டிஜிட்டல் என்கிற தன்மை வந்துவிட்ட பிறகு இவற்றை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்கள் இதை கற்றுக் கொள்ளவில்லை என்றால், இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்த மாட்டார்கள்.
பெற்றோர்கள் எதை செய்கிறார்களோ அதையே தான் குழந்தைகள் செய்வார்கள். இது ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும் பொருந்தும். பெற்றோர்கள் அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதை பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளை பாதிக்கிறதா என்பதை அறிய, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு கோளாறுகள் துறையில் பணிபுரியும் டாக்டர் கேட்டி போரோட்கின் என்பவர் இந்த ஆய்வை தலைமை தாங்கி மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்படி 2 முதல் 3 வயதுடைய குழந்தைகளின் அம்மாக்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். சுமார் 12 அம்மாக்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று நிலையான ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுகள் எதற்காக நடத்தப்படுகிறது என்பதை பற்றி அம்மாக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. எனவே எல்லோரும் இதில் இயல்பாக கலந்து கொண்டனர்.
முதல் டாஸ்க்கில் அம்மாக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவது, வீடியோக்களை பார்ப்பது போன்ற செயல்களை செய்து வந்துள்ளனர். அடுத்ததாக சில நாளிதழ்களை படிக்கும்படி செய்தனர். அதையும் அம்மாக்கள் செய்து வந்தனர். பிறகு கடைசியாக குழந்தைகளுடன் முழுமையாக கவனம் செலுத்தி விளையாடும்படி செய்துள்ளனர். இந்த இறுதி டாஸ்க்கில் ஸ்மார்ட்போன் மற்றும் நாளிதழ்களை வெளியில் வைத்துவிடும்படி கூறியுள்ளனர். இந்த ஆய்வுகளை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
நீங்கள் பிறரை சார்ந்திருக்கும் பெற்றோராக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
இந்த ஆய்வை மேற்கொண்ட பிறகு, இதில் சிலவற்றை கவனித்திருக்கின்றனர். குழந்தைக்கும் அம்மாவிற்கும் இடையில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கியமானது. சில விஷயங்களால் இவை தடைபட்டால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்க கூடும். இந்த ஆய்வின் முதல் மற்றும் இரண்டாம் டாஸ்க்கில் அம்மாக்கள் ஃபேஸ்புக் மற்றும் நாளிதழ் பார்த்து கொண்டு இருக்கும் போது குழந்தைகள் அவர்களிடம் எதாவது கேட்டால், அதற்கு அம்மாக்கள் சரியாக பதில் சொல்ல முடிவதில்லை.
உதாரணத்திற்கு, "அம்மா, அங்கே கார் உள்ளது" என்று குழந்தைகள் கூறினால், "ஆமாம், உள்ளது" என்று கூற கூடாது. மாறாக "ஆம், அது ஒரு சிவப்பு நிற கார்" என்று கூற வேண்டும். இப்படி செய்வதால் மட்டுமே சமூகம், மொழியியல், அறிவாற்றல் மற்றும் உணர்வு பூர்வமாகவும் குழந்தைகள் வளருவார்கள்.
இந்த ஆய்வு மூலம், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தாய்மார்கள் முழுமையாக தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை தான் அப்பாக்களுக்கு. ஆண், பெண் இருவரும் ஒரே மாதிரியான அளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தவதால் குழந்தைகள் உள்ள அப்பாக்களுக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் பொருந்தும் என்று டாக்டர் போரோட்கின் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.