மாதவிடாய் நாட்களில் சாக்லெட் சாப்பிடலாமா..?

மாதவிடாய் நாட்களின் சிரமங்களை தவிர்க்க சாக்லெட் நல்ல மருந்து..!

news18
Updated: September 24, 2019, 10:12 PM IST
மாதவிடாய் நாட்களில் சாக்லெட் சாப்பிடலாமா..?
மாதவிடாய் நாட்களில் சாக்லெட் சாப்பிடலாமா..?
news18
Updated: September 24, 2019, 10:12 PM IST
பெண்களுக்கு மற்ற நாட்களைக் காட்டிலும் மாதவிடாயின் ஐந்து நாட்களைக் கடப்பது பெரும் சிரமம். கடுமையான வலி, எரிச்சல், கோபம் என அனைத்தும் அவர்களை அசௌகரியமான சூழலுக்கு இட்டுச் செல்லும். இந்த சிரமங்களை உணவின் மூலம் ஓரளவு சமாளிக்க முடியும்.

அந்த வகையில் மாதவிடாய் காலத்தில் இனிப்பு வகைகளைச் சாப்பிடலாமா என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி. ஆசையாக கிடைத்த சாக்லெட்டை மாதவிடாய் என்ற காரணத்தால் ஒதுக்கி வைக்க முடியுமா என்ன..? இனி குழப்பமே இல்லாமல் பிடித்த சாக்லெட்டை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.
மாதவிடாய் நாட்களில் ஈஸ்ட்ரோஜின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் உடல் ஹார்மோன் அளவைச் சரி செய்ய கடுமையாகப் போராடும். இதனால் கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை, கோபம், எரிச்சல், ஆழ்ந்த சோகம், அமைதியை திடீரென உண்டாக்கும் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டால் உடனே உடல் செரோடோனின் என்ற மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோனை வெளியிட சிரமப்படும். இந்த செரோடோனின் ஹார்மோன் சுரக்க கார்பனேட் , சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த ஏதேனும் ஒரு உணவுப் பொருளை சாப்பிட்டால் ஹார்மோன் எளிதாகச் சுரக்கும். இதற்கு சிறந்தது தான் சாக்லெட். குறிப்பாக டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் ஃபீல் குட் உணர்வை அளிக்கும் செரோடோனின் ஹார்மோனை எளிதாகச் சுரக்கச் செய்யும்.அதோடு சாக்லெட்டில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு ஆகியவை இறுக்கிப் பிடித்திருக்கும் வயிற்றுத் தசைகளை இலகுவாக்கும்.

Loading...

அதில் குறிப்பாக பெல்ஜியன் சாக்லெட், முந்திரி திராட்சை கலந்த நட்ஸ் சாக்லெட், டார்க் சாக்லெட், பெர்ரீஸ் வகை சாக்லெட, உப்பு கலந்த சாக்லெட் போன்ற சாக்லெட்டுகளை மாதவிடாய் நாட்களில் பையில் வைத்துக்கொண்டு அளவாகச் சாப்பிடுங்கள்.

பார்க்க :

உரிய வயதுக்கு முன்பே சிறுமிகள் பருவம் அடைவதை தடுப்பது எப்படி?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...