• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இப்படி செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலேரியா பாதிப்புகளை 70% குறைக்கலாம்.. ஆய்வில் தகவல்

இப்படி செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலேரியா பாதிப்புகளை 70% குறைக்கலாம்.. ஆய்வில் தகவல்

மலேரியா

மலேரியா

குழந்தைகளுக்கு மலேரியா பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு புதிய அணுகுமுறையை கண்டுப்பிடித்த ஆராய்ச்சியாளர்கள்.

  • Share this:
மலேரியாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் கடும் பாதிப்புகளை தடுக்க தற்போதுள்ள மருந்துகளை புதிய அணுகுமுறையில் பயன்படுத்துவது, குழந்தைகளில் மலேரியாவை 70 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை இணைக்கும் ஒரு சோதனை 2 ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு மலேரியா பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பு மருந்துகளை தவிர, மலேரியா ஆபத்தை ஏற்படுத்தும் மோசமான பருவ காலத்திற்கு முன்னர் அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது "மிகவும் வியக்கத்தக்க" முடிவுகளை தருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக மலேரியாவை எதிர்த்துப் போராடுவதில் சில நாடுகள் பல ஆண்டுகளாக பின்தங்கியுள்ள நிலையில், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள சமீபத்திய இந்த ஆய்வு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் ஏற்படும் 400,000 இறப்புகளில் பெரும்பாலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம். கொசுக்களால் பரவும் கொடிய நோயான மலேரியா இன்னும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் நிலவி வரும் ஒரு பெரிய சுகாதார பிரச்சனையாக இருக்கிறது.

எனவே இது தொடர்பான ஆய்வு பரிசோதனை பர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய 2 நாடுகளில் 5 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கு இடைப்பட்ட சுமார் 6,000 குழந்தைகளிடம் 3 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு உலகின் முதல் மலேரியா தடுப்பூசியான RTS,S/AS01 மற்றும் சல்படாக்சின்-பைரிமெத்தமைன் மற்றும் அமோடியாக்கின் ஆகிய மலேரியா எதிர்ப்பு மருந்துகள் நான்கு கோர்ஸாக வழங்கப்பட்டன.

 
 லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் மிகவும் இளம் குழந்தைகளுக்கு மலேரியா பாதிப்புகளை தடுக்க பருவகால தடுப்பூசிகள் அல்லது மலேரியா எதிர்ப்பு மருந்துகள் என இரண்டில் ஒன்றை பயன்படுத்துவதை ஒப்பிடுகையில், தடுப்பூசி மற்றும் எதிர்ப்பு மருந்துகள் என்ற இரண்டும் கொடுக்கப்பட்ட போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கான தீவிர நிலைமை அல்லது இறப்பில் 70% குறைப்பை காட்டியுள்ளது.

 

Also read : சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தமா? வெர்ச்ஷூவல் ரியாலிட்டி கொடுக்கும் தீர்வு..

 ஆய்வின் போது பின்பற்றப்பட இந்த அணுகுமுறை ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் லட்சக்கணக்கான இறப்புகளில் காணப்படும் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மலேரியாவின் குறிப்பிடத்தக்க எழுச்சி சமீபத்திய ஆண்டுகளில் எரித்ரியா, சூடான் மற்றும் கொலம்பியா போன்ற சில நாடுகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே இந்த ஆய்வின் இணை ஆசிரியர் டேனியல் சந்திரமோகன் ஆய்வு பற்றி கூறுகையில், "இந்த சோதனையின் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக இருந்தன.

எங்கள் ஆராய்ச்சி உலக நாடுகள் எவ்வாறு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன என்பதை போன்றே, மலேரியா தடுப்பூசியை பயன்படுத்தி பாதிப்புகளை குறைக்கும் ஒரு கூட்டு அணுகுமுறையை காட்டியது. முக்கியமாக பக்கவிளைவுகள் ஏதுமின்றி மில்லியன் கணக்கான இளம் உயிர்களைக் காப்பாற்றும் திறன் எண்கள் ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்று கூறி உள்ளார். இதே அணுகுமுறை பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு பல இளம் உயிர்களை காப்பாற்றும் என்று நம்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: