உலகில் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அவ்வப்போது கணித்து வருகின்றனர். உலகில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்களை கணித்தவர்களில் மிகவும் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ். ஏற்கனவே, கொரோனா வைரசின் அடுத்தடுத்த வேரியன்ட்கள் உலகில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த ஆண்டு உலகம் பல ஆபத்துகளை சந்திக்கப் போகிறது என்று பல்கேரிய நாட்டு சைக்கிக் ஒருவர் கணித்துள்ளார்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா என்ற ஒரு பார்வையற்ற உளவியலாளர் 2022ஆம் ஆண்டு வைரஸ் தாக்குதல் சுனாமி மற்றும் ஏலியன் தாக்குதல் பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே பாபா வாங்காவின் பல கணிப்புகள் உண்மையாகி இருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது, இளவரசி டயானாவின் மரணம், 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதல், அமெரிக்காவின் பிரசிடன்ட் ஆக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இவர் கச்சிதமாக கணித்துள்ளார். அதுமட்டுமின்றி பல்கேரியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் பிரக்சிட் ஆகியவற்றைப் பற்றியும் மிகச்சரியாக கணத்துள்ளார்
வான்ஜெலியா குஷ்டேரோவா, பன்னிரண்டாம் வயதில் ஒரு புயலில் தன்னுடைய பார்வையை இழந்தார். ஆனால், பார்வை இல்லையென்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் சக்தியை தனக்கு கடவுள் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு இறந்த பாபா வாங்கா 5079 ஆம் ஆண்டு வரையில் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றிய கணிப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், அதனால் வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
உலகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தண்ணீருக்காக ஒரு போர் உருவாகலாம் என்றும் அவர் கணித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு ஒருபக்கமிருக்க ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் தீவிரமான வெள்ளம் பாதிப்பு உண்டாகும் மேலும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் உயிர் உயிர் இழப்பும் கணிசமாக இருக்கும் என்று அவரது கணிப்பு.
டெல்டா முதல் ஓமைக்ரான் வரை… 2021-ஆம் ஆண்டில் மக்களை அச்சுறுத்திய கோவிட் தொற்றின் பயணம்...
அடுத்ததாக ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக நீங்காத நிலையில், புவி வெப்பமடைவதால், இது நாள் வரை உரைந்துள்ள ஒரு வைரஸ், ஸ்வீடனில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்படும். விர்ச்சுவல் ரியாலிட்டி இந்த ஆண்டு அதிகரிக்கும்.
பேராபத்துகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல, ஏலியன் அட்டாக் அதாவது பூமியில் வேற்றுகிரகவாசிகளின் தாக்குதல் இந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கும். ஒரு சிறிய கோள் மூலம் பூமியில் உள்ளவர்களைப் பற்றிய தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இவரின் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.