Home /News /lifestyle /

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே தான் காரணம் : IVF நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே தான் காரணம் : IVF நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

IVF சிகிச்சை முறை

IVF சிகிச்சை முறை

பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன்கள், தரமற்ற மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கருமுட்டை உற்பத்தி, பிசிஓடி, காசநோய் (டிபி), எண்டோமெட்ரியோசிஸ், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தேசிய குடும்ப சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவின் தேசிய மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) முதன்முறையாக 2.0 க்கு கீழே குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேம்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், அங்கீகரிக்கப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளை வழங்குவதற்கும் புகழ் பெற்ற மருத்துவமனையான Gaudium IVF கணிப்பின் படி, இந்தியாவில் நிகழும் குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு 40 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும், 20 சதவீதம் இருவரும் காரணமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின்மையை அதிகரிக்கும் காரணிகள் :

- மனநிலை மற்றும் மன அழுத்தத்தால் உயிரியல் கால சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்.
- தூக்கம் மற்றும் ஈட்டிங் டிஸ்ஆர்டர்
- நீரிழிவு நோய்
- காசநோய்
- காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகளின் வெளிப்பாடு
-அதிகப்படியான மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம்
- அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணிகள் கருவுறாமைக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கௌடியம் ஐவிஎஃப் (Gaudium IVF) கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் படி, ஒவ்வொரு தம்பதியும் வித்தியாசமானவர்களாக இருப்பதால், அவர்களுக்கான பிரச்சனைகள், கருவுறுதல் சிகிச்சை தொடர்பான பயணம், கருவுறுதலுக்கான வெற்றி வாய்ப்பு ஆகியவையும் மாறுபடும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் கருவுறுதல் சிகிச்சை என்பது ஒரு பாதுகாப்பான செயல்முறை என்றும், இது ஒரு ஜோடியின் கருவுறுதல் வாய்ப்புகளை பெரிதும் மேம்படுத்த உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.IVF தொடர்பான கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகளை தகர்த்துவிட்டு, கருவுறுதல் சிகிச்சையைப் பற்றிய விழிப்புணர்வை இந்திய மக்களிடையே அதிகரிப்பது அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படக் காரணம் என்ன..?

கௌடியம் ஐவிஎஃப் நடத்திய ஆய்வு மூலமாக அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதே ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் ஆண்கள் அதிக அளவில் புகையிலையை பயன்படுத்துவது குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கிய காரணியாக உள்ளது.

கர்ப்ப காலத்தின் 4-வது ட்ரைமெஸ்டர் பற்றி தெரியுமா..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

அதேசமயம், மெட்ரோ நகரங்களில் வசிக்கும் ஆண்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் நைட் ஷிப்ட் வேலை பார்ப்பது, டார்கேட், பணிச்சுமை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்கள் உயிரியல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு ஆண்மை குறைபாட்டிற்கு ஆளாவது தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன்கள், தரமற்ற மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கருமுட்டை உற்பத்தி, பிசிஓடி, காசநோய் (டிபி), எண்டோமெட்ரியோசிஸ், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.டாக்டர் கன்னா கூறுகையில், “20,000 தம்பதிகளுக்கு மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளித்த எனது அனுபவத்தில், இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள நோயாளிகள், பெரும்பாலான மக்கள் ஆபத்துக் காரணிகளைப் பற்றி போதுமான அளவு அறிந்திருக்கவில்லை என்பதையும், அது குழப்பத்தை இன்னும் அதிகரிக்க காரணமாகிறது. ஆன்லைனில் கிடைக்கும் தகவல் மற்றும் தரவு ஆகியவற்றில் நம்பகமான ஆதாரங்களை மட்டுமே பார்க்கவும் அல்லது IVF நிபுணர்களின் ஆலோசனை பெறவும் தம்பதிகள் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.

நமது புவியியல், தட்பவெப்பநிலை போன்றவை, நம் உடலுக்கு வரும்போது எல்லாமே முக்கியம். எனவே உங்கள் வாழ்க்கை முறை சீர்குலைவுகளை மாற்றியமைக்க மற்றும் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதற்கு எப்போதும் உங்கள் நிபுணத்துவ மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy care

அடுத்த செய்தி