வேலைக்கு செல்பவர்களுக்கு இன்றைய அவசர யுகத்தில் சமையல் என்பது கூடுதல் சுமையாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து உண்பதை பலரும் விரும்ப தொடங்கிவிட்டனர். ஸ்விக்கி (Swiggy), ஜொமோட்டோ (zomatto) ஆகியவை இந்தியாவின் முதன்மை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக திகழ்கின்றன.
ஆன்லைனில் அதிகம் நபர்கள் ஆர்டம் செய்யும் உணவுகள் குறித்த தகவல்கள் Swiggy’s sixth annual StatEATstics report மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி திகழ்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 115 இந்தியர்கள் பிரியாணியை ஆர்டர் செய்கின்றனர்.
அதிகம் ஆர்டர் செய்யப்படும் சிற்றுண்டி வகையில் சமோசா முதல் இடத்தையும் பவ் பஜ்ஜி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. பான் ஆசியன், இந்தியன் மற்றும் சைனீஸ் ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்படும் முதல் மூன்று உணவு வகைகளாக உள்ளன. அதைத் தொடர்ந்து மெக்சிகன் மற்றும் கொரியன் ஆகியவை உள்ளன.
இதேபோல், 2021 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் இருமடங்காக அதிகரித்ததால் ஆரோக்கியத்தை பிரதானமாக கொண்ட உணவங்களுக்கான தேவையும் அதிகம் ஏற்பட்டது. இந்த உணவகங்களில் ஆர்டர் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தகைய உணவங்களுக்கான தேடலில் பெங்களூரு முதல் இடத்தையும் ஹைதராபாத், மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இதையும் படிங்க: பம்பரமாய் சுழன்றுவரும் பெண்கள்… குடும்ப வாழ்க்கையையும் பணியையும் பேலன்ஸ் செய்வது எப்படி?
இரவு 7-9 மணியில் அதிக உணவு ஆர்டர்கள் ஆன்லைன் மூலம் செய்யப்படுகின்றன. Cheese-garlic Bread, Popcorn மற்றும் French Fries ஆகியவை இரவு 10 மணிக்கு மேல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உணவு, மளிகை பொருட்கள், மருந்துகள் ஆகியவை ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களில் முதல் முன்று இடங்களை பிடித்துள்ளன.
மேலும் படிக்க: Rewind 2021 : 2021-இல் உடல் எடையைக் குறைத்து நம்மை ஆச்சரியப்படுத்திய பிரபலங்கள்..!
சென்னையை பொறுத்தவரை சிக்கன் பிரியானி, சிக்கன் பிரைட் ரைஸ், மட்டன் பிரியானி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. tips விசயத்திலும் சென்னை மக்கள் தாராளமாகவே உள்ளனர். அதன்படி, ஸ்விக்கி டெலிவரி நபருக்கு உணவு ஆர்டர் செய்த நபர் ரூ.6000 டிப்ஸ் வழங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food Delivery App, Online, Swiggy