’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்

சுதந்திரமாக இருங்கள், யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் என்று மதுமிதா கூறியுள்ளார்

’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்
பிக்பாஸ் மதுமிதா
  • Share this:
ஓகே ஓகே, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் பிரபலமான மதுமிதா, பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பாகத்திலும் தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அவர் தற்கொலை முயற்சி செய்ததுதான் அந்த சீசனின் டாப் ஹிட் எனலாம்.

பிக் பாஸை விட்டு வெளியேறியதும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வளைதலங்களில் ஆக்டிவாக இருக்கத் துவங்கினார். அப்படி சமீபத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதில் தற்போது கொரோனா என்பதால் மக்கள் ஊரடங்கில் வீட்டில் என்ன செய்வதென தெரியாமல் இருந்த நேரத்தில் இதை பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் இந்த ஊரடங்கு நேரத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார். அதை குறிப்பிடும் வகையில் அவரே கார் ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதற்கான கேப்ஷனாக உங்கள் தினசரி வாழ்க்கையில் புதிதாக எதையும் செய்ய முடியாது என்று சொன்னால்...இனி அப்படி சொல்ல முடியாது சுயமாக என்னால் எதையும் செய்ய முடியும்... இனி என்னால் சுயமாக கார் ஓட்ட முடியும். சுதந்திரமாக இருங்கள். யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார் மட்டும் இல்லாமல் பைக் ஓட்டவும் கற்றுக்கொண்டுள்ளார். அதையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.அதன் கேப்ஷனாக “ பைக் ஓட்டுறது அவ்ளோ பெரிய விஷயமா?இல்லை, அதைக் கற்றுக்கொள்ள நினையாமலிருப்பது பெரிய விசயம் எனப் புரிந்துகொண்டேன்.கற்றுக்கொண்டேயிருப்பதில், இப்போது இதுவும் ஒன்று” என்று கூறியுள்ளார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading