கொரோனா தொற்று பெரிய அளவில் உலகை பாதித்ததால் மக்கள் எல்லோரும் வீட்டிலே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக இந்த 2021 ஆம் ஆண்டில் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு நமது வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி விட்டது. வீட்டிலே இருந்ததால் மனதளவிலும், உடல் அளவிலும் ஏராளாமான பாதிப்புகள் வர தொடங்கின. இந்த மோசமான நிலையினால் பலருக்கு உடல் எடை கூடியது.
சாதாரண நபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை உடல் பருமன் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டது. ஒருசில சினிமா பிரபலங்கள் இந்த தடைகளை உடைத்தெறிய கடுமையன உடற்பயிற்சிகள், நல்ல உணவுகள் ஆகியவற்றை தொடர்ந்து எடுத்து கொண்டு சிறப்பான தோற்றத்தை பெற்றுள்ளனர். இந்த பிரபலங்கள் யார்யார் என்பதை இனி விரிவாக பார்ப்போம்.
சமீரா ரெட்டி :
தமிழ் சினிமாவில் தான் நடித்த முதல் படத்திலேயே பலரின் மனதை கொள்ளை அடித்தவர் சமீரா ரெட்டி. அவரின் உடல்வாகு மற்றவர்களை போன்று இல்லாமல் சற்று தனித்துவம் பெற்றது. இருப்பினும் திருமணத்திற்கு பின் சமீராவின் உடல் எடை கூட தொடங்கியது. குறிப்பாக அவருக்கு குழந்தை பிறந்த பின் எல்லா பெண்களையும் போலவே உடல் பருமன் அதிகமானது. இதை பலர் கேலியாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வந்தனர்.
View this post on Instagram
இதை பற்றியெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சமீரா இறங்கினார். 92 கிலோவில் இருந்து 82 கிலோவிற்கு தற்போது வந்துள்ளார். உடல்நலம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் உடலியல் மாற்றங்கள் போன்ற பலவற்றை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவரின் இந்த சிறப்பான முயற்சி மற்ற பெண் நடிகைகளையும், தாய்மார்களையும் ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
பாரதி சிங் :
இவர் பாலிவுட்டில் மிக சிறந்த ஸ்டென்ட்-அப் காமெடி நடிகை. மேலும் பிரபலமான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சுமார் 16 கிலோ வரை பாரதி சிங் தனது எடையை குறைத்துள்ளார். 91 கிலோவில் இருந்த இவர் தற்போது 76 கிலோவில் உள்ளார். இவர் இன்டெர்மிட்டேன்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) முறையை பின்பற்றி வருகிறார். இந்த உணவுமுறையால் இவருக்கு ஏற்கனவே இருந்து வந்த சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமாவும் தற்போது கட்டுக்குள் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
From there to here. 20kgs lighter, I m at my healthiest best. Look after urself,remember, health is wealth. N those who ask if I am sick, thanks for ur concern. I never been so fit ever before. If I inspire even 10 of u out here to lose weight n get fit,I know I have succeeded ❤️ pic.twitter.com/tbho2TRBxE
— KhushbuSundar (@khushsundar) December 5, 2021
குஷ்பு சுந்தர் :
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பு அவர்கள். இவருக்கும் குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை கூடியது. இந்த வருடம் 20 கிலோ வரை எடையை குறைத்து பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த பெருந்தொற்று காலத்தில் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகளை பின்பற்றி இதை சாதித்து காட்டி உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
View this post on Instagram
லிசெல் ரெமோ டிசோசா :
பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து வருபவர் லிசெல் ரெமோ டிசோசா. இவர் கடந்த 2 வருடங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இதற்காக இன்டெர்மிட்டேன்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்றி வந்துள்ளார். மேலும் கிட்டோ டயட், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் சிறப்பான முறையில் எடையை குறைத்துள்ளார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.
View this post on Instagram
View this post on Instagram
ஆதித்யா நாராயண் :
இந்திய சினிமாவில் தனித்துவமான குரல் வளத்தை கொண்டவர் உதித் நாராயண். அவரின் மகனான ஆதித்யா நாராயண் அவர்களும் பிரபலமான பல பாடங்களை பாடியவர். இந்த ஆண்டு சிறப்பான முறையில் உடல் எடையை குறைத்த பிரபலங்களில் இவரும் ஒருவர். சுமார் 13 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார். தொடர்ச்சியான ஜிம் பயிற்சிகளின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது என்று இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மசாபா குப்தா :
பாலிவுட்டில் சிற ந்த ஃபேஷன் டிசைனராக பணிபுரிபவர் மசாபா குப்தா. சில ஆண்டுகளாக பிசிஓடி நோயினால் பாதிக்கப்பட்டு வந்தவர், இதனால் உடல் எடையும் கூடியது. இவர் பல மாதங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வந்ததால் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு இருந்த ஹார்மோன் பாதிப்புகளும் தற்போது குறைந்துள்ளது என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.