• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் குளிப்பதற்கு இது தான் பெஸ் டைம்.. தெரியுமா?

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் குளிப்பதற்கு இது தான் பெஸ் டைம்.. தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

லேப்டாப்பில் வேலை செய்வதால் மிகவும் சோர்வாக உணர்கிறீர்களா ? இந்த டைமில் குளித்து பாருங்கள்..

  • Share this:
    அலுவலகத்தில் ஒர்க் ஃபிரம் ஹோம் என அறிவித்தபோது சில வாரங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருந்திருக்கும். ஆனால் தற்போது பல மாதங்களுக்கு மேல் ஆகியும் ஒர்க் ஃபிரம் ஹோம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அலுவலக வாழ்க்கையை மறந்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை. இதனால் அவர்களுடைய தினசரி வாழ்க்கை முறையும் மாறியுள்ளது. அதோடு தனிமை, சோர்வு, தொடர் வேலை களைப்பு போன்ற பிரச்னைகளையும் சந்திக்கின்றனர்.

    அப்படி தொடர் வேலையால் சோர்வாக உணர்கிறீர்கள். வேலை செய்யவே மூட் இல்லை என புலம்புகிறீர்கள் எனில் இது உங்களுக்கு பெஸ்ட் தீர்வாக இருக்கும்.

    மனிதனுக்கு புத்துணர்வை அளிக்கும் விஷயம் குளியல்தான். நிம்மதியான குளியல் பல வகைகளில் உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். சுகாதாரம் மட்டுமன்றி மனதிற்கு நிம்மதி அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கும். எனவே நீங்கள் களைப்பாக உணர்கிறீர்கள். மூளை அப்படியே உறைந்துவிட்டது. யோசிக்கவே முடியவில்லை.
     வேலையில் ஏதேனும் பிரச்னை இருப்பின் அதற்கு தீர்வு காண சிரமப்படுகிறீர்கள் எனில் சற்றும் சிந்திக்காமல் ஒரு குளியலை போட்டுவிடுங்கள். அதன் பிறகு டெஸ்கில் அமர்ந்து பாருங்கள். ஃபிரெஷ்ஷான யோசனைகள் வரும். வேலை திறனும் அதிகரிக்கும்.


    எனவே வீட்டில் அலுவலகப் பணியில் இருந்தால் மதிய நேரம்..அதாவது நீங்கள் களைப்படையும் நேரம் என்பதே மதியமாகத்தான் இருக்கும். எனவே மதிய நேரத்தில் குளியுங்கள். அப்போதுதான் காலையிலிருந்து தொடர் வேலை செய்துவிட்டு மதியம் ஆற்றல் குறைந்து சோர்வாகவும், சோம்பேறியாகவும் உணர்வீர்கள். எனவே மதியம் குளிப்பதே சிறந்த நேரம். 

    Also read ; உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கணுமா ? வீட்டிலேயே இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..




    ஒருவேளை மதிய உணவுக்குப் பின் களைப்பு உண்டானால்., உணவுக்குப் பிறகு குளிக்க முடியவில்லை எனில் ஸ்ட்ரெச்சஸ் செய்வது, , பாடல் கேட்பது , ஆரோபிக்ஸ் போன்றவற்றை செய்யலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: