செப்டம்பர் மாதத்தில் வீட்டு மனை, சொந்த வீடு வாங்க திட்டமிட்டுளீர்களா? நல்ல நாள் மற்றும் நேரம் இதோ..

காட்சி படம்

செப்டம்பர் மாதத்தில் வீடு வாங்க போறீங்களா ? நல்ல நாள் மற்றும் நேரம் இதோ..

  • Share this:
எந்த ஒரு சுபகாரியங்களையும், நல்ல விஷயங்களையும் செய்யும் மக்கள் அதனை ஒரு சுபநாளில் செய்ய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். குழந்தைக்கு பெயர் வைப்பது முதல் திருமணம், வளைகாப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடுபவர்கள் முதலில் பார்ப்பது, எந்த சுப முகூர்த்த நாளில் வைக்கலாம் என்று தான். ஏனெனில், நல்ல நாளில் சுப விஷயங்களை செய்வது குடும்பத்திற்கு வளர்ச்சியையும், ஆசியையும், மகிழ்ச்சியையும் பெற்று தரும்.

அதேபோல, ஏதேனும் சொத்துக்களை வாங்கும் போது கூட நல்ல நாள் பார்த்து வாங்குவது வழக்கம். கார், இருசக்கர வாகனம், வீட்டு மனை, வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவது, ஏன் சிலர் தங்க நகை வாங்குவதை கூட சுப நாளில் நல்ல நேரத்தில் வாங்கவே விரும்புகிறார்கள். இப்படி செய்வதால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கை பெருகுமாம். இந்த சுப முகூர்த்த தினங்கள் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் இந்து வேத நாட்காட்டியின் படி கணக்கிடப்படுகின்றன.

இந்து நாட்காட்டியில் ஒரு நாளின் சுப மற்றும் அசுப நேரங்கள் முதல் நட்சத்திரம் வரை அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு விவரமும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாகவும் இருக்கும். எனவே, எந்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தையும் செய்வதற்கு முன் சுப நேரங்களை கவனமாகப் பார்ப்பது உங்கள் குடும்பத்திற்கு சிறந்த நன்மைகளைப் பெற்று தரும். பொதுவாக சொத்து வாங்குவது என்பது நிச்சயமாக மிகப் பெரிய விஷயம் தான். எனவே சிறந்த நாள் மற்றும் நேரத்தில் சொத்து வாங்கும் விஷயங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் பஞ்சாங்கத்தின்படி,செப்டம்பர் மாதத்தில் வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவதற்கான நல்ல சுபமுகூர்த்த நாள் மற்றும் நேரங்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

செப்டம்பர் 6 (திங்கட்கிழமை): பத்ரபாத மாதத்தில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியின் 7 ஆம் தேதி காலை 7:40 முதல் மாலை 6:01 வரை எந்த நேரத்திலும் சொத்து வாங்குவதற்கு உகந்த தினம் ஆகும்.

செப்டம்பர் 7 (செவ்வாய்க்கிழமை): பத்ரபாத மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை திதியில் காலை 6:01 முதல் மாலை 5:05 வரை உள்ள காலப்பகுதி சொத்து வாங்க சிறந்த நேரமாக இருக்கும்.

செப்டம்பர் 11 (சனிக்கிழமை): செப்டம்பர் 11ம் தேதி காலை 11:23 முதல் செப்டம்பர் 12ம் தேதி காலை 6:03 வரை நடக்கும் சுக்ல பக்ஷத்தில் பத்ரபாத மாத பஞ்சமி திதியில் சொத்து சம்பந்தமான பத்திரங்களை விற்க உகந்த நேரமாகும்.

Also read : உங்களின் முக சுருக்கங்களை போக்குவதற்கு 5 பாதாம்கள் போதும்..

செப்டம்பர் 12 (ஞாயிற்றுக்கிழமை): சுக்ல பக்ஷத்தில் பத்ரபாத மாத சஷ்டி திதியில் சொத்து வாங்குவதற்கான சுப முகூர்த்தம் நேரம் காலை 6:04 மணி முதல் மாலை 5:22 மணி வரை.

செப்டம்பர் 15 (புதன்கிழமை): பத்ரபாத மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் நவமி திதியில், சொத்து வாங்க சிறந்த நேரம் காலை 11:19 முதல் செப்டம்பர் 16ம் தேதி அதிகாலை 4:56 வரை.

செப்டம்பர் 20 (திங்கட்கிழமை): பத்ரபாத மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் பூர்ணிமா திதியில் காலை 6:08 மணி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 4:02 வரை எந்த நேரமும் சொத்து ஒப்பந்தத்திற்கு சீல் வைக்க ஏற்ற நேரமாக இருக்கும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: