• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இவ்வளவு நன்மைகளா..? உங்கள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் சூரியகாந்தி விதைகள்!

இவ்வளவு நன்மைகளா..? உங்கள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் சூரியகாந்தி விதைகள்!

சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதில் சூரியகாந்தி விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

  • Share this:
உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் ஒன்று சூரியகாந்தி விதைகள். உங்கள் காலை உணவுகளில், சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். சூரியகாந்தி விதைகளில் நிறைய ஊட்டச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 30 கிராம் அல்லது சிறிதளவு சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது போதுமானது. சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உங்கள் தோல் மற்றும் முடியையும் மேம்படுத்துகிறது. சூரியகாந்தி விதைகள் உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

வயதான தோற்றத்தை தடுக்கிறது

சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதன் சிறந்த நன்மைகளில் ஒன்று, நமது உடலில் செலினியத்தை தூண்டுவது. இதனால் சேதமடைந்த செல்கள் புத்துணர்வு பெறுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் சருமத்தில் தோன்றும் வயதான தோற்றம் தடுக்கப்படுகிறது. எனவே, உங்கள் சருமம் இளமையுடன் பிரகாசமாகவும் இருக்கும். மேலும் சருமத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை தடுத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது

சூரியகாந்தி விதைகள் கொழுப்பு மற்றும் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடவும், உங்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி முகப்பரு ஏற்படுவதை தடுக்கிறது.

நச்சு தன்மையை நீக்குகிறது

சூரியகாந்தி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதில் சூரியகாந்தி விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இது அடைபட்ட சரும துளைகளை திறந்து சருமத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் பிரகாசமான தோற்றத்தை பெறுகிறது.

இயற்கை மாய்ஸ்சரைசர்

சூரியகாந்தி விதைகளிலிருந்து பெறப்படும் சூரியகாந்தி எண்ணெய், இயற்கை கொழுப்புகளின் வளமான மூலமாகும். இது உங்கள் சருமத்தில் இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதனால் வறட்சியடைந்த உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது

சூரியகாந்தி விதைகள் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் துணை புரிகிறது. சூரியகாந்தி விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் எனப்படும் ஒரு தனித்துவமான மூலப்பொருள் உள்ளது. இது மயிர்கால்களை வலுப்படுத்துகிறது. இது பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வலுவான கூந்தலுக்கு...

சூரியகாந்தி விதைகள் வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றின் வளமான மூலமாகும். இவை இரண்டும் ஆரோக்கியமான கூந்தலுக்கு முக்கியமானவை ஆகும். சூரியகாந்தி விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உங்கள் தலைமுடியை ஈரப்பதத்துடன் ஊடுருவி, சேதத்தை சரி செய்கிறது. இதன் மூலம் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது

சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. மேலும் இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. சூரியகாந்தி விதை எண்ணெய்யை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை தவறாமல் மசாஜ் செய்து வந்தால் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: