Home /News /lifestyle /

ஒளிரும் சருமத்தைப் பெறக் காப்பர் பெப்டைடுகள் உதவுமா? எப்படி? இதோ முழு விபரம்!

ஒளிரும் சருமத்தைப் பெறக் காப்பர் பெப்டைடுகள் உதவுமா? எப்படி? இதோ முழு விபரம்!

சரும பாதுகாப்பில் காப்பர் பெப்டைடுகள்

சரும பாதுகாப்பில் காப்பர் பெப்டைடுகள்

இரத்த நாளங்களில் காணப்படும் திசுக்களைப் பராமரிக்கவும், தோலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் காப்பர் பெப்டைடுகள் உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்றைக்கு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள காப்பர் பெப்டைட்டுகளில் அமினோ அமிலங்கள் இருப்பதால் உங்களது சருமத்தைப் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

    நம்மில் பலர் 30 வயதை எட்டியவுடன் முடி நரைத்து, வயதான தோற்றத்தை அடைவதைப் பார்த்திருப்போம். இதோடு முகமும் வயதான தோற்றத்துடன் காணப்படுவதால் இளமையிலேயே முதுமையான உணர்வைப் பெற்றிருப்போம். இதுபோன்ற நிலைக்கு நாம் தள்ளப்படுவதற்குச் சத்துக் குறைபாடுகள் தான் காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே தோலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை அதிகப்படுத்த வேண்டும். இது தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பிற்கு உதவியாக உள்ளது.

    முன்பெல்லாம் நம் முன்னோர்கள் தெரிந்தோ? தெரியாமலோ? உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கக்கூடிய பொருள்களைத் தான் உபயோகித்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் செம்பு பாத்திரங்கள். இதில் அத்தியாவசிய தாதுக்கள் அதிகளவில் உள்ளதால் உடலைச் சீராக இயக்குவதற்கு உதவி செய்வதோடு நமது உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை நமக்கு வழங்கியது. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் மனதில் வைத்துத் தான் தற்போது ப்யூட்டி பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் மூலப் பொருள்களாகக் காப்பர் பெப்டைடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

    இந்த காப்பர் பெப்டைடுகள் தாமிரம் மற்றும் அமினோ அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது சருமத்தைப் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கொலாஜனை அதிகரிக்கிறது. இது சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையைத் தக்க வைக்க உதவுவதோடு , சருமத்தில் உறுதியையும், மென்மையையும் மேம்படுத்துகிறது. மேலும் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் தான் நரை முடி மற்றும் சரும பராமரிப்பிற்காகத் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களில் காப்பர் பெப்டைடுகள் சேர்க்கப்படுகிறது.

    மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் சருமத்தைப் பாதுகாக்கிறது. இரத்த நாளங்களில் காணப்படும் திசுக்களைப் பராமரிக்கவும், தோலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுவதால் சருமம் பாதுகாக்கப்படுகிறது. தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் சருமத்தின் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது.

    Also Read : காபி குடிப்பதால் உங்கள் சருமத்திற்குக் கிடைக்கக் கூடிய 5 நன்மைகள் இதோ!

    காப்பர் பெப்டைடுகள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்குமா?

    சரும பராமரிப்பு என்று வரும் போது காப்பர் பெப்டைட்கள் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம்கள் சில நேரங்களில் சிலருக்குத் தோல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். தோல் அழற்சி, தோலின் சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும். பொதுவாக எந்தவொரு புதிய அழகு சாதனப் பொருள்களையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்களது சருமத்தில் பேட் டெஸ்ட் செய்வது அவசியமான ஒன்று என்பதையும் மட்டும் நினைத்துக் கொண்டால் போதும்.

    காப்பர் பெப்டைடுகள் கொண்ட அழகு சாதனப் பொருள்கள், சீரம் போன்றவற்றை உங்களுக்குப் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால், உணவுப் பொருள்களின் வாயிலாகவும் நீங்கள் உபயோகிக்கலாம். ஓட்ஸ், மாட்டு இறைச்சி, சிப்பி காளான் மற்றும் குடைக் காளான், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளு, முந்திரி, சுண்டல் மற்றும் சால்மன் மீன் போன்றவற்றில் காப்பர் பெப்டைடுகள் அதிகளவில் நிறைந்துள்ளதால் உங்களது உணவு முறைகளில் மறக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உங்களது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Copper benefits, Oily Skin, Skincare

    அடுத்த செய்தி