24 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் டீன்ஏஜ்காரர்களே.. நீங்க என்ன சொல்கிறீர்கள் 90ஸ் கிட்ஸ்..?

கடந்த நூற்றாண்டுகள் வரை 20 வயதை எட்டினாலே திருமணம் , குழந்தை, குடும்பப் பொறுப்புகள் என சுமக்க வேண்டிய நிலை இருந்தது.

24 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் டீன்ஏஜ்காரர்களே.. நீங்க என்ன சொல்கிறீர்கள் 90ஸ் கிட்ஸ்..?
24 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் டீனேஜர்களே
  • News18
  • Last Updated: August 27, 2019, 9:50 PM IST
  • Share this:
டீனேஜ் வயதைக் கடந்த 90களின் புலம்பல் மீம்ஸ், ட்ரோல்களை தினம் தினம் சமூக வலைதளங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த செய்தி மன ஆறுதலை தரலாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராயல்ஸ் குழந்தை மருத்துவமனையின் ஆராய்ச்சியில் பருவ வயது காலத்தை நீட்டிக்கக் கோரியுள்ளது. அதில் 24 வயது வரை அவர்கள் பதின் பருவம் கொண்டவர்களே என கருத வேண்டும் எனக் கூறியுள்ளது.

டீ ஏஜ் பருவம் என்பது 10 வயதில் தொடங்கி 19 வயதில் நிறைவடைகிறது. The Lancet Child & Adolescent Health வெளியிட்டுள்ள ஆய்வில், உடல் மற்றும் சமூக மாற்றங்கள் கருதியே பதின் பருவத்தை ஐந்து வருடங்கள் அதிகரிக்கச் சொல்வதாகக் கூறியுள்ளது.




அதாவது கடந்த நூற்றாண்டுகள் வரை 20 வயதை எட்டினாலே திருமணம் , குழந்தை, குடும்பப் பொருப்புகள் என சுமக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போதைய வாழ்க்கை சூழல் மாற்றம் அவற்றை மாற்றியுள்ளன. அவர்கள் 24 வயது வரையிலும் கல்வி படிப்பைக் கூட முடிப்பதில்லை, குடும்ப பொறுப்புகளையும் சுமப்பதில்லை. அவர்கள் உடல் ரீதியாகவும், சமூகம் சார்ந்தும் பெரும் மாற்றங்களை சந்திப்பதில்லை. எனவே அவர்களை பதின் பருவத்தினராக அழைக்க வேண்டிய காரணங்களை அடுக்கியுள்ளது.

18 வயதிற்குக் கீழ் குழந்தை தொழிலாளர்கள் வேண்டாம் என்பது அப்படியே இருக்கும் பட்சத்தில் மற்ற பொறுப்புகளை மாற்றுவது சரியானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. அதேபோல் வயது மட்டுமே அவர்களை முதிர்ச்சியடைந்தவர்களாக காண்பிப்பதில்லை என்பதையும் தெளிவாக்குகிறது.இறுதியாக இந்த ஆய்வு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading