யோகா என்பது மன அழுத்தம் மற்றும் மனா சோர்வை நிர்வகிக்க உதவும் ஒரு சிறந்த வழி மட்டுமல்ல, உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்து சிறப்பான பலன்களை பெற செய்ய வேண்டிய ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையும் கூட.
உடல் எடையை குறைக்க போராடுபவர்களுக்கு யோகா சிறப்பான ஒன்று. குறிப்பிட்ட சில யோகா முறைகளை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் உடலில் கூடுதல் எடை கொண்ட பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்கலாம். எவ்வளவு முயன்றாலும் உடலில் கொழுப்பு குறையாமல் இருக்கும் ஒரு முக்கிய பகுதி தான் வயிறு. தொப்பை என்பது கொழுப்புடன் தொடர்புடையது. வயிற்று பகுதியில் இருக்கும் அதிக கொழுப்பை எரிக்க உதவும் சில யோகா போஸ்களை இங்கே பார்க்கலாம்...
நவாசனம் (Boat pose):
நவ என்றால் வடமொழியில் படகு என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்பதால் போட் போஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
* முதலில் விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்
* பின்னர் மூச்சை உள்ளிழுத்து கால்களை சற்று மடக்கி மெதுவாக மேலே தூக்குங்கள். இவ்வாறு தூக்கும் போது உங்கள் உடலை சற்று பின்னால் சாய்க்க வேண்டும்.
யோகா செய்யும்போது இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்...
* கால்களை வளைக்காமல் 45 டிகிரி கோணத்தில் நீட்டி, உங்கள் உடற்பகுதியை நிமிர்ந்து வைத்து V ஷேப்பை உருவாக்கவும்.
* கைகளை கால்களுக்கு மேல் நீட்டவும். மார்பை மேலே உயர்த்துவதன் மூலம் சமநிலையை பராமரிக்கவும்
* இப்போது உங்களின் புட்டம் மட்டுமே தரையில் படும்படி இருக்கும். உங்கள் உடல் பார்ப்பதற்கு ஒரு படகு போல் இருக்கும்.
* இதே நிலையில் சுமார் 20 வினாடிகள் இருந்த பிறகு கால்களை தளர்த்தி நேராக உட்காரவும்.
புஜங்காசனம் (கோப்ரா போஸ்):
புஜங்காசனம் என்பது பாம்பு படமெடுத்து நிற்கும் நிலையை குறிக்கிறது. புஜம் என்றால் தோள் என்பதே பொதுவான பொருள். இந்த ஆசனத்தில் மேல் உடலை இரு கைகளால் தாங்கி நிற்பதால் மணிக்கட்டு, முழங்கை, தோள் பகுதிகள் பலமடைகின்றன.
* ஒரு விரிப்பில் தரையை முகம் பார்த்தவாறு குப்புறப் படுக்கவும்.
* பின்னர் உங்கள் உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும்.
* உங்கள் கால்களை நீட்டி, மூச்சை உள்ளிழுத்து உங்கள் மேல் உடலை மெதுவாக உயர்த்தவும்.
* மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பு வரை உடலை உயர்த்திய பின் கைகள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
* இப்போது உங்கள் இரு தோள்களை பின்தள்ளி மார்பை விரிக்கவும்.
* இந்த நிலையில் இருந்து கொண்டு முகத்தை இப்போது மேல் நோக்கி உயர்த்தவும். சுமார் 20 நொடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
கும்பகாசனம்:
* தரை பகுதியை பார்த்தவாறு முகம் வைத்து குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.
* மூச்சை உள்ளிழுத்தவாறே கைகள் மற்றும் கால்விரல்கள் மூலம் உங்கள் மேல் உடலை உயர்த்துங்கள்
* உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாக இருக்க வேண்டும்.
* தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும்.
* கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி சுவாசத்தை உள்ளிழுத்து தலையை உயர்த்தி நேராக பார்க்க வேண்டும்.
உஸ்ட்ராசனம் (ஒட்டக போஸ்):
* விரிப்பில் முட்டி போட்டபடி 2 முட்டிகளுக்கு இடையே போதுமான அளவு இடைவெளி இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
* பின் வயிறு, மார்பு, தலை உள்ளிட்டவைகளை பின்புறம் வளைத்து இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும்.
* வலது கையால் வலது கணுக்காலையும் இடது கையால் இடது கணுக்காலையும் பிடிக்கவும். அல்லது பாதங்களின் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கலாம்.
தனுராசனம்:
* முதலில் தரைவிரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள்
* பின்னர் உங்கள் 2 கால்களை மேல்நோக்கி நீட்டி, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கைகளால் உங்கள் கால்களைப் பிடிக்கவும்.
* மூச்சை உள்ளிழுத்து உங்கள் மார்பை முடிந்தவரை உயர்த்தவும்.
* இப்போது ஒரு வில்லின் வடிவத்தை போல உங்கள் போஸை மாற்ற உடலை நன்கு ஸ்ட்ரெச் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.