வைட்டமின் சி சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் சரும நிறத்தையும் இயற்கையாகவே கூட்டுகிறது. சருமத்திற்குத் தேவையான கொலாஜன் சுரப்பதில் வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுகிறது. இது சருமம் தளர்ச்சியடைதல், கோடு மற்றும் சுருக்கங்கள் விழுவதைத் தடுக்கிறது.
ஓரல் சப்ளிமெண்ட் வடிவத்திலும் வைட்டமின் சி சத்துக்களை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் UVB கதிர்களின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாத்தல், காயங்கள் மற்றும் நிறமாற்றத்தை சரி செய்தல், டிஎன்ஏ சேதம் மற்றும் கொலாஜன் தொகுப்பை சரிசெய்தல் போன்ற பல வகைகளிலும் பலன் கொடுக்கிறது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவுகள்:
நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல வகை காய்கறி, பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தை கொடுக்கிறது.
ALSO READ | உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிளை ஒரே மாதிரியாக சாப்பிட்டால் போர் அடிக்கும் - இதுபோல சாலட் செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்!
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளிலும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. பழங்கள், காய்கறிகளை தவிர, ரோஹு என்ற மீனில் வைட்டமின் சி உள்ளது.
ஒருநாளைக்கு எவ்வளவு வைட்டமின் சி தேவை?
உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-யை பொறுத்தவரை பெண்களுக்கும், ஆண்களுக்கும் வெவ்வேறு அளவுகள் உள்ளன. பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 மில்லி கிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது. அதுவே ஆணுக்கு நாளொன்றுக்கு 90 மில்லி கிராம் தேவைப்படும்.
நிறமி, நிறமாற்றம் அல்லது ஏதேனும் தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, தினசரி 1000 மில்லி கிராம் வரை வைட்டமின் சி தேவைப்படும்.
வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி?
காசு கொடுத்து காஸ்மெட்டிக் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்...
ALSO READ | செம்பருத்தி பூவில் ஜூஸ் குடிச்சிருக்கீங்களா? இதோ ரெசிபி...
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை ஊற்றவும், அதனுடன் 1/4 டீஸ்பூன் வைட்டமின் சி பவுடரை சேர்க்கவும்.
2. வைட்டமின் பவுடர் தண்ணீரில் நன்றாக கரையும் படி கலக்கவும்
3. இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் சேர்த்து நன்றாக கலக்கவும்.
4. இந்த சீரத்தை பயன்படுத்தும் முன்பு சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.
குறிப்பு: உங்களுக்கு சென்சிடிவ் சருமம் எனில், வைட்டமின் பவுடரின் அளவை குறைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிதளவு அலோவேரா ஜெல்லைக் கலக்கலாம்.
ALSO READ | விரதம் இருக்கப் போகிறீர்களா? - உங்கள் உடலுக்கு எனர்ஜி கிடைக்க இந்த உணவுகளை முயற்சித்துப் பாருங்கள்
வைட்டமின் சி சீரத்தை பயன்படுத்துவது எப்படி?
வைட்டமின் சி சீரத்தை காலை மற்றும் இரவு என ஒருநாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். சீரத்தை பயன்படுத்தும் முன்பு முகத்தை நன்றாக சோப் அல்லது பேஸ் வாஷ் கொண்டு கழுவிக்கொள்ள வேண்டும். மென்மையான டவலால் முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, வைட்டமின் சி சீரத்தை விரல் நுனியில் எடுத்து முகத்தில் சமமாக தடவவும். சீரத்தை முகம் நன்றாக உறிஞ்சிக்கொள்ளும் வகையில் லேசாக மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் உங்களுடைய வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.