ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கவில்லை எனில் முடி உதிர்வதும் ஒரு அறிகுறியாகும். அதேபோல் பருவநிலை மாற்றங்களும் முடி உதிர்வை உண்டாக்கும். ஆனால் இவை எல்லாம் சரியாக இருந்தும் உங்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் நீங்கள் பயன்படுத்தும் சீப்பு கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படித் தெரியுமா..?
அதாவது நீங்கள் சீப்பை முறையாகப் பயன்படுத்தவில்லை எனில் இவ்வாறு நிகழலாம். உதாரணத்திற்கு நீளமான அடர்த்தியான முடியைக் கொண்டவர்கள் வேரிலிருந்து சீப்பை அழுத்தி வாரக்கூடாது. முடியிலிருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் சிக்கல் உள்ள முடியை கண்டறிந்து அதை நீக்கிவிட்டு வார முடியும். முடியிலிருந்து துவங்கும்போது தேவையற்ற முடி சிக்கலையும் தவிர்க்கலாம். இதனால் முடி கொட்டுவது இருக்காது.
பிளாஸ்டிக் சீப்புகளைக் காட்டிலும் மரச்சீப்புதான் சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அதுதான் சிக்கல்களை எளிமையான முறையில் எடுக்க உதவும். அவை தேவையற்ற சிக்கலையும் உண்டாக்காது.
பிளாஸ்டிக் சீப்புகள் வேர்களை சேதப்படுத்தலாம். ஆனால் மரச்சீப்புகள் எப்படி அழுத்தி வாரினாலும் அவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்குமே தவிர சேதப்படுத்தாது.
அதேபோல் எண்ணெய் தடவி வாரும் போது மரச்சீப்பிலும் எண்ணெய் உறிஞ்சி அது வேர்களில் பட்டு வாரும்போது எண்ணெய் ஒவ்வொரு முடிக்கும் சென்று சேரும். இதனால் முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
இதுபோன்ற பல நன்மைகளைக் கொண்டிருப்பதால் பொடுகுத் தொல்லை இருக்காது, முடி வளர்ச்சி வேகமாக இருக்கும்.
சீப்பை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது..?
ஆண்டிசிபேடிக் லோஷன் என கடைகளில் கேட்டால் கிடைக்கும். அதை வாரம் ஒருமுறை பயன்படுத்தி சீப்பை ஊற வைத்து வாரினால் சுத்தமாகும். அழுக்குகள் அடியோடு போய்விடும். இதனால் தொற்று, பொடுகு தொல்லைகள் இருக்காது.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.