best skincare serums for acne : மக்கள் தங்கள் சருமத்தை எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது என்பது குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். சருமப்பராமரிப்புக்காக சந்தைகளில் மாய்ஸ்சரைசர், பவுண்டஷன், சன்ஸ்கிரீன், சீரம் என பல அழகு சாதனப்பொருட்கள் கிடைக்கின்றன. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க தற்போது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று சீரம் (serum). ஏனென்றால், இது சருமத்தை அலர்ஜி இல்லாமல் ஆரோக்கியமாக வைக்க பராமரிக்கிறது.
ஆனால், சிலர் நீண்டகாலமாக சருமத்தை பராமரிக்க காலை மற்றும் இரவு நேரங்களில் சீரம் பயன்படுத்தினாலும் அதற்கான பலனை அவர்கள் பெறுவதில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று பல நேரங்களில் நான் யோசித்திருப்போம். உங்கள் தோல் பராமரிப்பு சீரம் வேலை செய்யாததற்கான சாத்தியமான காரணங்களை நாங்கள் இங்கே உங்களுக்கு கூறுகிறோம்.
சீரம் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 6 விஷயங்கள் :
சீரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தாமல் இருப்பது
சரும பராமரிப்புக்காக நீங்கள் பயன்படுத்தும் சீரம் அல்லது பிற தோல் பராமரிப்புப் பொருட்களை நாம் சரியான இடைவெளியில் பயன்படுத்த வேண்டியது அவசியம். சரியான இடைவெளியில், சீரம் பயன்படுத்தாத போது நமக்கு அதன் பலன் கிடைப்பதில்லை.
உதாரணமாக, பகலில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்பட வேண்டும், இரவில் ரெட்டினோல் சீரம் பயன்படுத்தப்பட வேண்டும். தயாரிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சீரம் மற்றும் பிற தோல் பராமரிப்புப் பொருட்களை எப்போதும் பயன்படுத்துவதை உறுதி செய்தால் அதன் பலனை பெறலாம்.
சீரத்தின் செறிவை நீங்கள் சரிபார்க்கவில்லை
நீங்கள் வாங்கும் சீரம் அல்லது எந்த வகை ஸ்கின் கேர் பொருட்களை வாங்கினாலும் அதில் பயன்படுத்தியுள்ள மூலக்கூறுகளை சரி பார்ப்பது அவசியம்.
அப்படி நீங்கள் வாங்கும் சருமப்பராமரிப்புகள் உங்கள் சருமத்திற்கான பிரச்சனைகளை சரி செய்ய உதவுமா , அதில் உள்ள கெமிக்கல் மூலக்கூறுகள் பலனளிக்குமா என்பதை கவனிப்பது அவசியம். அப்படி குறிப்பிட்ட கெமிக்கல் மூலக்கூறுகளின் அளவு அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது உங்கள் சருமத்திற்கு ஒருபோதும் பலன் தராது. மாறாக எதிர்விணையாற்றும்.
உதாரணமாக நீங்கள் வாங்கும் சீரத்தின் கெமிக்கல் மூலக்கூறு குறிப்பிட்ட அளவுகோலை மீறி பயன்படுத்தியிருந்தால் அவை உங்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கலாம். அதன் விளைவு நீண்ட நாட்களுக்கு இருக்கும். எனவே சீரான அளவில் , குறிப்பிட்ட அளவுகோலில் பயன்படுத்தப்பட்டுள்ள சீரம் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால் தேவையற்ற சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தோல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்காமை
“இன்னைக்கி ஒருநாள் போடவில்லை எனில் என்ன ஆகா போகுது. அதுனால ஒன்னும் இல்ல” என உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்துடன் நீங்கள் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெற முடியாமல் போகலாம். சிறந்த பலனைப் பெற உங்கள் சீரம்களை தவறாமல் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Also Read | முகத்தில் எக்கச்சக்கமா முகப்பரு வருதா?.. அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
காலாவதி தேதியை புறக்கணித்தல்
காலாவதியான பொருட்களைப் பயன்படுத்துவது ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, எந்த பொருட்களை வாங்கினாலும் அவற்றின் காலாவதி தேதியை கவனிக்க வேண்டியது அவசியம். உங்கள் சீரம் காலாவதியாகிவிட்டால் கூட எந்த விளைவையும் காட்டாமல் இருக்கலாம்.
எனவே அடிக்கடி சருமப் பராமரிப்பை வாங்கி குவித்து வைக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். ஏனென்றால், ஒரு பொருளை நீங்கள் முழுமையாக உபயோகிப்பதற்கு முன் அதன் காலாவதி தேதி முடிந்து விடும். இது உங்கள் பணத்தை வீணாக்கும். உங்கள் சீரம் காலாவதியானதும் அதன் வீரியத்தை இழந்துவிடும்.
சரியாக அவற்றை பராமரிக்காமல் இருப்பது
தோல் பராமரிப்பு பொருட்கள் எப்போதும் சரியான அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். குளியலறையில் அல்லது நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக சேமிப்பு வெப்பநிலை அதிகமாக இருந்தால், தயாரிப்புகள் அவற்றின் செயல்திறனை இழக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, வைட்டமின் சி சீரம்கள் எப்போதும் குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க சூரிய ஒளி அல்லது வெப்பத்தைத் தவிர்க்கவும்.
கிளைமேட் சேஞ்ச்
பருவத்தில் அல்லது காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் (Climate change) சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். காலநிலை மாற்றத்தால், சீற்றத்தில் உள்ள சேர்மங்களில் உணர்திறன் மாறுபடும். கோடை காலத்தில், சருமத்திற்கு நீரேற்றம் கொடுக்கும் சீரம்களை தேர்வு செய்வது நல்லது. குளிர்காலத்தில், தோல் வறண்டு மற்றும் செதில்களாக இருக்கும். எனவே, சீரம் மற்றும் ஒரு நல்ல மாய்ஸ்சரைசருடன் இணைப்பதன் மூலம் பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face serum, Skin Care