ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தலைமுடியை எவ்வளவு பராமரித்தாலும் சரிவரவில்லையா..? அப்போ நீங்க இந்த தவறைத்தான் செய்றீங்க..!

தலைமுடியை எவ்வளவு பராமரித்தாலும் சரிவரவில்லையா..? அப்போ நீங்க இந்த தவறைத்தான் செய்றீங்க..!

தலைமுடி பிரச்னை

தலைமுடி பிரச்னை

தலைக்குக் குளிக்கும்போது ஹேர் பிரெஷ் பயன்படுத்தக்கூடாது. ஸ்கிரப்பிங் செய்யக்கூடாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தலைமுடியை பராமரிப்பது பெரிய டாஸ்க் என்றே சொல்லலாம். முடி கொஞ்சம் உதிரத் துவங்கினாலும் , பொடுகு இருந்தாலும் பதறிப்போய் வீட்டுக் குறிப்பு, ஷாம்பு பயன்பாடு என எல்லாவற்றையும் செய்து பார்ப்பதில் அவசரம் காட்டுவோம். ஆனாலும் சரியாகவில்லை என்று உணர்ந்தால் நீங்கள் செய்வது இந்த தவறுகள்தான்.

  தலைகுளிக்க சுடு நீர் பயன்படுத்துதல் மிகவும் தவறு. இந்த பழக்கம் வேர்களை பாதிக்கும். இயற்கையாக சுரக்கும் எண்ணெய்யை அடியோடு எடுத்துவிடும்.

  தவறான ஹேர் ஸ்டைல் டூல்ஸ் பயன்படுத்துவதும், குறைந்தவிலைக்கு பிராண்டுகள் அல்லாத ஹேர் டூல்ஸ் வாங்குவதும் தலைமுடியை பாதிக்கும்.

  இரவு தூங்கும் போது தலை முடியை இழுத்து டைட்டாகக் கட்டுவது தவறு. பகலிலும் செய்யாதீர்கள். இது முடியை உடைக்கச் செய்யும்.

  பாதங்கள் பளபளவென மின்ன வேண்டுமா? உடனே வீட்டில் இதை செய்யுங்கள்..!

  தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும்போது முடிக்கு மட்டும் எண்ணெய் வைத்துவிட்டு வேர்களை மறந்துவிடுவது தவறு. முதலில் முடியின் வேர்களில்தான் எண்ணெய் வைக்க வேண்டும். முடியில் அதன்பிறகே வைக்க வேண்டும்.

  ஈரமான தலைமுடியில் சீப்பு பயன்படுத்துதல் தவறு. எந்த ஹேர் ஸ்டைலும் செய்யக் கூடாது. ஹேர் ஸ்டைலிங் கருவிகளும் பயன்படுத்தக் கூடாது. நன்கு காய்ந்தபிறகே பயன்படுத்த வேண்டும்.

  தலைமுடியை துவட்டுகிறேன் என்ற பெயரில் டவல் கொண்டு வேர்களில் அழுத்தித் துடைத்தல் கூடாது.

  தலைக்குக் குளிக்கும்போது ஹேர் பிரெஷ் பயன்படுத்தக்கூடாது. ஸ்கிரப்பிங் செய்யக் கூடாது.

  தினமும் தலைக்குக் குளித்தல் தவறு. மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குளிக்க வேண்டும்.

  ’நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் ஆபத்தா..? பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

  பார்க்க : 

  Published by:Sivaranjani E
  First published: