• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முகம் மற்றும் உடல் மாற்றத்திற்கு காரணமே இந்த தண்ணீர் தான்... ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை!

முகம் மற்றும் உடல் மாற்றத்திற்கு காரணமே இந்த தண்ணீர் தான்... ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை!

சீரியல் நடிகை யமுனா

சீரியல் நடிகை யமுனா

தனது அழகில் புதிய மாற்றம் மற்றும் அதற்கான காரணத்தை பகிர்ந்து உள்ளார் யாரடி நீ மோகனி சீரியல் நடிகை யமுனா.

  • Share this:
    யாரடி நீ மோகினி சீரியலில் நல்ல பேயாக நடித்த சின்னத்திரை நடிகை யமுனா சின்னத்துரை பகிர்ந்து கொண்ட அழகு குறிப்புகள்

    ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் என்றால் அது ‘யாரடி நீ மோகினி’ சீரியல் தான். இந்த சீரியலில் அன்பான, அழகான பேயாக சித்ரா கேரக்டரில் நடிப்பால் மிரட்டியவர் சின்னத்திரை  நடிகை யமுனா சின்னத்துரை. தொடர்ந்து 1000 எபிசோடுகள் சீரியலில் பேயாக நடித்த முதல் சின்னத்திரை நடிகையும் இவர் தான். ஏற்கெனவே பல படங்களில், சீரியல்களில் நடித்த யமுனாவுக்கு சித்ரா ரோல் மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது. யாரடி நீ மோகினி சித்ரா என்றாலே தெரியாதவர்கள் யாரும் இல்லை. தற்போது விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    சீரியலில் இவரின் மேக்கப், உடைகள், அணிகலன்கள் தனி கவனத்தை பெறும். அதிலும் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தன்னை அழகில் மிகவும் மேருகேற்றி கொண்டார் யமுனா. வர வர வயது குறைவு போல் இவரின் முகத்தில் அப்படி ஒரு மாற்றம். முன்பை விட தற்போது பயங்கர கலராக மாறி விட்டார். வெயில் படத்தில் பரத் - பசுபதியின் கடைசி தங்கையாக குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது அழகில் மேற்பட்ட மாற்றம் மற்றும் அதற்கான காரணத்தை பகிர்ந்து உள்ளார் யமுனா.

    உடற்பயிற்சி எப்போதுமே ஃபிட்னஸ் மீது கவனமாக இருக்கும் யமுனா எடை கூடாமல் தன்னை பார்த்து கொள்கிறார். இதற்காக தினமும் 2 மணி நேரம் ஜிம்மில் ஓர்க் அவுட் செய்கிறார். ஜிம் போகாத சமயத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை இவரே செய்வாராம். துணி துவைப்பது, வீட்டில் சும்மாவே நடப்பது, மாடி படி ஏறி இறங்குவது என முடிந்த வரை ஆக்டிவாகவே இருப்பாராம். கூடவே புதினா கலந்த தண்ணீரை 2 லிட்டர் தினமும் குடிப்பாராம்.



    முதல் நாள் இரவே 2 லிட்டர் தண்ணீரில் புதினா, எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சேர்த்து ஊற வைத்து அந்த தண்ணீரை பாட்டிலில் ஊற்றி முடிந்தால் தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை குடித்தால் போதுமாம். முகம் தங்கம் போல் ஜொலிக்குமாம். உடல் உறுப்புகளும் சுத்தமாகுமாம். இதுதான் இவரின் அழகுக்கான சீக்ரெட் டிரிங்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: