குளிர்காலத்தில் நமது சருமம், முடி பாதிப்படைகிறது. முடி சேதமடைவது, பொடுகு செதில்கள் உருவாவது போன்றவை பொதுவான பிரச்சனைகள் ஆகும். எனவே ஆரோக்கியமான முடியை பெற, நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதுகுறித்து விளக்கிய ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி, குளிர்காலத்தில் கூந்தலை பராமரிப்பதற்கான சில ஆலோசனைகள் குறித்து ஷேர் செய்துள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.
முடி பராமரிப்பு, மற்ற அழகு பராமரிப்பு போலவே அவசியமானதாகும். தற்போது பெரும்பாலானோர் தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ, எண்ணெய்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கின்றனர்.
ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது, அதிக ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் முடி சேதமடையும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் நாம் தினமும் செய்யும் சில விஷயங்கள் நமது முடியை சேதப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
வெந்நீரில் குளிப்பது :
பொதுவாக குளிர்க்காலத்தில் சூடு தண்ணீரில் தலைக்கு குளிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. வெந்நீரில் குளிப்பது சூடாகவும், இதமாகவும் இருக்கும். ஆனால் வெந்நீரில் குளிப்பதால், முடியின் வேர்களில் உள்ள உள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கையான எண்ணெய் சுரப்புகள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் கோஹ்லி கூறுகையில், "சூடான நீர் உங்கள் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி முடியை வறட்சியடைய செய்து உதிர செய்யும்" என கூறியுள்ளார்.
ஸ்டைலிங் :
ஸ்டைலிங் கருவிகள் உங்கள் தலைமுடியை அழகாக்கும் அதே நேரத்தில், இது முடியை வெப்பமடைய செய்வதால் அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் தலைமுடியை தினமும் ஸ்டைல் செய்வதால், ஈரப்பதம் இழப்பு, முடி உதிர்தல் மற்றும் நுனி முடி பிளவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது. இது உங்கள் தலைமுடி உதிர்வை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஸ்ட்ரைட்டனிங், கர்லர்கள் போன்ற ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
NewYear resolution 2022 : இந்த ஆண்டு உங்கள் சருமத்தை பராமரிக்க நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழிகள்
ஈரமான கூந்தலுடன் வெளியே செல்வது :
சில நேரங்களில் முடியை உலர்த்தி கிளம்புவதற்கு நேரம் இல்லாமல் பலரும் ஈரமான கூந்தலுடன் வெளிய செல்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில் வீசும் காற்று உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை இதன் மூலம் இழைகளை பிரித்து, உடைவது, பிளவுகள் மற்றும் உரித்தல் ஆகியவை அதிகரிக்கும்" என்பதால், இந்த நிகழ்வுகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
டவல் :
தலைமுடியை உலர்த்தப் பயன்படுத்தப்படும் டவல் மென்மையானதாக இருக்க வேண்டும். தலைமுடியைக் காய வைக்கும்போது, டவலால் அழுத்தித் துடைப்பது கூடாது. இதனால், முடி கடினமாகிப் பொலிவு இழந்து, உடைபட வாய்ப்பு உண்டு. டவலால் ஒத்தி எடுத்து, கைவிரல்களால் கோதி, காயவிட வேண்டும். இப்படிச் செய்ய நேரம் ஆகலாம், ஆனால், கேசம் ஆரோக்கியமாக இருக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.