உறங்கச் செல்லும் முன் பாதங்களைக் கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..?

பாதங்களைப் பராமரிக்க இரவுதான் சரியான நேரம்

news18
Updated: May 4, 2019, 3:05 PM IST
உறங்கச் செல்லும் முன் பாதங்களைக் கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..?
பாதங்கள் பராமரிப்பு
news18
Updated: May 4, 2019, 3:05 PM IST
பாதங்கள் உடலின் மிக முக்கிய பாகம். உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன.

அதனால்தான் இன்று பெடிகியூர் செண்டர்கள், பாதங்களுக்கு மசாஜ் அளிக்கும் மையங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பாதங்களுக்கு மசாஜ் அளிக்கும்போது உடலின் முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு செயலாற்றுகிறது. மனதிற்கும் ரிலாக்ஸாக இருக்கிறது.

உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. பாதங்களில் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதற்கென நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். எந்த நேரம் பாதங்களைப் பராமரித்தால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்? என்றால் இரவுதான் சரியான நேரம் என்கின்றனர் மருத்துவர்கள்.


இரவு நேரத்தில் பாதங்களைக் கழுவிப் பராமரிப்பதால் இறந்த செல்கள் நீங்குகின்றன. இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. தசை வலி, மூட்டு வலிகள் குணமாகின்றன. மூளையும் , மனது ரிலாக்ஸாவதால் தூக்கமும் நிம்மதியாக் வரும்.பாதங்களைப் பராமரிக்கும் முறை :

Loading...

வெது வெதுப்பான நீரில் கல் உப்பு அல்லது பிங்க் சால்ட் போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத் தேய்க்க வேண்டும். இதனால், இறந்த செல்கள் நீங்கும். பின் மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக தேங்காய் எண்ணெய் தடவினால் வறட்சிகளின்றி மாய்ஸ்சரைஸராக இருக்கும்.
First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...