நமது உடலில் வெப்பநிலை குறையும் போது நம்மில் பலர் உடம்பில் உள்ள முடியை அகற்றுவதை விட்டுவிடுகிறோம். பொதுவாக உடலில் வளர முடி நமது சருமத்தை பாதுகாக்கும் வகையில் இருப்பவை. ஆனால், சிலருக்கு அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்து விடுவதால் மிகவும் சிரமமான உணர்வை தரும். எனவே, இவற்றை நீக்குவதற்காக வேக்சிங் போன்ற செய்முறைகளை முயற்சி செய்வது வழக்கம். நிபுணர்களின் கூற்றுப்படி, வேக்சிங் செய்ய சிறந்த நேரம் என்றால் அது குளிர்காலம் தான் என்று கூறுகின்றனர்.
குளிர் மாதங்களில் நம் உடலில் முடி வளர அதிக வாய்ப்புள்ளது, இதனால் முடி உடையாமல் அகற்றுவதை எளிதாக்குகிறது. இதன் விளைவாக, உங்கள் முடியின் வேரில் இருந்து நீக்கப்படும். மேலும் குளிர்காலம் முழுவதும் இதைச் செய்வதன் மூலம், கோடையில் உங்கள் முடி வளர்ச்சி குறைந்து விடும். அதாவது வெப்பமான காலநிலையில் முடி அகற்றும் செயல்முறைகள் குறைவாக இருக்கும் என்பதால், குளிர் காலங்களில் வேக்சிங் செய்வது சிறந்த வழியாகும். மேலும், வெப்ப காலங்களில், முடி மேலும் அரிதாகவும், மெல்லியதாகவும் மாறும், அப்போது அதை அகற்றுவது எளிதாக இருக்கும்.
குளிர்காலத்தில் வேக்சிங் செய்வதன் மூலம் வறண்ட, இறந்த சருமத்தை நீக்கி மென்மையான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக, மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்தினால் மிருதுவான சருமத்தை பெறலாம். இருப்பினும், இதில் சிந்திக்க சில விஷயங்கள் உள்ளன. குளிர்காலம் பண்டிகைக் கூட்டங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விருந்துகள் நிறைந்த காலமாக இருக்கும். நீங்கள் கலந்துகொள்ளும் எந்தவொரு சிறப்பு நிகழ்வு நாட்களில், வேக்சிங் செய்வதை தவிர்க்கவும்.
ஏனெனில் சென்சிட்டிவ் சருமம் உடையவராக இருந்தால், மிகவும் லேசான சிவத்தல் அல்லது கருமை பாதிப்பு தோலில் ஏற்படலாம். இப்படி சிவந்து காணப்பட்டால் அது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். இதில் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆல்கஹால் உட்கொண்ட பிறகு சில மணி நேரங்களுக்கு வேக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும்.
Also Read : ஹேர் கலர் செய்திருந்தால் இதையெல்லாம் பின்பற்றுவது அவசியம்.. நீண்ட நாட்களுக்கு கலர் போகாது..!
கூடுதலாக, எந்த வகையான உடற்பயிற்சிக்கு பின்னரும் வேக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் வியர்வையானது முடி மற்றும் தோலுக்கு எரிச்சலை தரக்கூடும். மீண்டும் மீண்டும் வேக்சிங் செய்வதன் மூலம், முடியில் உள்ள மயிர்க்கால்களின் பிடியானது காலப்போக்கில் தளர்ந்து, முடிகளை எளிதாக அகற்றும். எனவே, வேக்சிங் செய்யும்போது மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்வது நல்லது.
மேலும், முடியை அகற்ற ஷேவிங் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மிகவும் குறுகிய முடி இழைகள் திறம்பட அகற்றப்படாது. வேக்சிங் செய்யும்போது 4-6 மிமீ நீளம் செய்வதே சிறந்தது. அதே போன்று, வேக்சிங் செய்த பிறகு மாயிச்சரைசரை பயன்படுத்துவதும் நல்ல பரிந்துரையாக கருதப்படுகிறது. குறிப்பாக சென்சிட்டிவ் வகை தோல் கொண்டவர்களுக்கு இது மிகவும் தேவைப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.