உணவில் உப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஸ்கின் கேர் மற்றும் ஹேர் கேரிலும் உப்பின் பயன்பாடு முக்கியமாகக் கருதப்படுகிறது. காஸ்மட்டிக்ஸ் எதுவும் இல்லை என்றாலும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்க முடியும். இதன் மூலம் சருமம் பளிச்சென்று பொலிவாகவும் மிருதுவாகவும் ஆகும். அதே போல உப்பு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. உப்பில் பல்வேறு ஹீலிங் குணங்கள் உள்ளன. மேலும் கடல் உப்பில் கனிமச்சத்துக்கள் அதாவது மினரல்ஸ் நிறைந்துள்ளன. இது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது சம்பத்திற்கு மட்டும்.
ஸ்கின் கேரில் முக்கியப் பொருளாக இடம்பெற்றுள்ள கடல் உப்பு, கூந்தல் பராமரிப்பிலும் அதே அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஹேர் கேரில் உப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்படலாம். உங்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்! அனைத்து வகையான ஹேர்ஸ்ப்ரேக்களிலும் உப்பு ஒரு முக்கியமான உட்பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது. கடல் உப்பு மற்றும் ஹேர் ஸ்ப்ரே எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
உங்களுடைய ஹேர் கேர் பொருட்களில் கடல் உப்பு சேர்க்கப்பட்ட ஹேர் ஸ்ப்ரே கட்டாயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கூந்தல் எப்படி இருந்தாலும், எந்த வகையாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் ஸ்டைலைப் பெற கடல் உப்பு உதவும். மாடல்களுக்கு இருப்பது போன்ற கூந்தலை பெற விரும்பினால், நீங்கள் ஸீ-சால்ட் ஹேர் ஸ்ப்ரேவைப் பயன்படுத்தலாம்.
நீளமான கூந்தலாக இருந்தாலும் சரி, அலையலையான கூந்தலாக இருந்தாலும் சரி, எல்லா விதமான கூந்தலுக்கும் கடல் உப்பு உள்ள ஸ்ப்ரே அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சும் தன்மை உப்புக்கு உள்ளது. இது கூந்தலில் உள்ள சீபம் என்ற எண்ணைப்பசையையும் உறிஞ்சி இயற்கையான அடர்த்தியான பவுன்சியான கூந்தலாக மாற்றும். ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தும் போது, கூந்தலின் வேர்கள் திறக்கப்பட்டி, உப்பில் உள்ள சத்துக்கள் கூந்தலை வலுவாக்கி, அழகான டெக்ஸ்ச்சர் தரும்.
இதனால் தான் வித விதமாக கூந்தல் அலங்காரத்தில் கடல் உப்பு உள்ள ஹேர் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய்பசை மட்டுமல்லாமல், முடிக்கற்றைகளில் இருக்கும் ஈரத்தை அப்சார்ப் செய்யும். இதனால், கூந்தல் ஃபைபர் விரிவடையும். வழக்கத்தை விட முடிக்கற்றைகள் அடர்த்தியாக இருக்கும். மேலும், பீச் வேவ்ஸ் போன்ற உணர்வையும் தரும்.
எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது..!
நீளமான ஸ்ட்ரெயிட் கூந்தலுக்கு மட்டுமல்லாமல், இயற்கையான சுருள் கேசம் அல்லது செயற்கையான சுருள் கேசத்துக்கும் இது அழகான டெக்ஸ்ச்சரைத் தருகிறது.
அதே நேரத்தில், இதில் ஈரப்பதம் உறிஞ்சும் தன்மை இருப்பதால், அடிக்கடி பயன்படுத்தினால், வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு கூடுதலாக வறட்சி ஏற்படும்.
ஸீ-சால்ட் ஹேர் ஸ்ப்ரேவைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்:
* கூந்தல் கொஞ்சம் ஈரமாக (தண்ணீர் சொட்டாதவாறு) இருக்க வேண்டும், கூந்தலை சிக்கு இல்லாமல் நன்றாக வாரிக் கொள்ளுங்கள்
* நீங்கள் விரும்பும் ஹேர் ஸ்ப்ரேவைப் பயன்படுத்தலாம். ஸ்ப்ரே பாட்டிலை நன்றாகக் குலுக்கி, கூந்தல் மீது ஸ்ப்ரே செய்யவும்
* மிகவும் மெல்லிய கூந்தலாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு கூந்தல் நல்ல அடர்த்தியாக வேண்டும் என்றாலோ, முதலில் டிரை ஷாம்பூவைப் பயன்படுத்தி பின்னர் ஸ்ப்ரே செய்யுங்கள்
* எப்போதுமே ஈரக் கூந்தலில் தான் ஸ்ப்ரே செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
* இயற்கையாகவே அதிக வரட்சியான கூந்தல் உடையவர்கள் அல்லது சென்சிடிவ் கூந்தல் கொண்டவர்கள், ஹேர் ஸ்ப்ரேவை சீரம் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair growth, Hair Problems