முடி உதிர்தல் என்பது மனிதர்களிடம் காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் முடி உதிர்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரும் சராசரியாக ஒவ்வொரு நாளும் 100 முடி வரை இழக்கிறார்கள். ஆண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கு பல காரணிகள் உள்ளன. ஹார்மோன் மாற்றங்கள் முதல் பல மருத்துவ நிலைகள் வரை முடி உதிர்வு பல காரணங்களால் தூண்டப்படலாம். முடி உதிர்வு சிலருக்கு படிப்படியாக இருக்கலாம். சிலருக்கு திடீரென தலையில் இருக்கும் முடி கொத்து கொத்தாக உதிர்ந்து தலை முழுவதும் வழுக்கைத் திட்டுகள் ஏற்படலாம்.
தவிர பயன்படுத்தப்படும் ஹேர் டை, கலரிங், ப்ளீச்சிங் அல்லது ஹைலைட் செய்யும் போது முடிக்கு நிறைய சேதம் ஏற்படுகிறது. அமோனியா இல்லாத தயாரிப்புக்கள் சிறந்தது என்றாலும் ஆனால் நீண்ட காலம் நீடிக்காது. நிரந்தர ஹேர் டை பயன்படுத்துவது முடி உதிர்தல் மற்றும் முடியின் நுனி பிளவு போன்ற சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கான பொதுவான காரணங்களாக ஹேர் கலரிங், கெரட்டின் அல்லது சிஸ்டைன் போன்றவை இருக்கின்றன.
ஹேர் கலரிங் செய்திருந்தாலும் சிறந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம். SLS ஃப்ரீ மற்றும் சீரம்களை தொடர்ந்து ஒரு கண்டிஷனரை பயன்படுத்த ஸ்டைலிஸ்ட்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் முடியை கலரிங் செய்ய முடிவு செய்தால் கலர்களை முடியின் வேரிலிருந்து அடிக்க வேண்டாம் என்று உங்கள் சிகையலங்கார நிபுணரிடம் வலியுறுத்துங்கள். ஏனென்றால் முடி சேதம் என்பது டை மற்றும் ஸ்டைலிஸ்ட்டை பொறுத்தது. ஹேர் கலரிங் அல்லது டை அடிப்பது என்று முடிவெடுத்து விட்டால் சிறந்த சிகையலங்கார நிபுணரிடம் செல்வதே சிறந்தது.
அவர்களிடம் இருக்கும் நன்கு அறியப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். ஒரு சிலருக்கு கரடுமுரடான வறண்ட கூந்தல் இருக்கலாம் மற்றும் முன்கூட்டிய முடி நரைக்கும். இது போன்ற சிக்கல் கொண்டவர்கள் தலைமுடிக்கு இரவில் நன்கு எண்ணெய் தடவி, மறுநாள் பேபி ஷாம்பு கொண்டு கழுவி, கண்டிஷனிங் செய்யலாம். மக்கள் தங்கள் தலைமுடியை கலரிங் அல்லது ஸ்ட்ரெயிட்னிங் செய்யும் போது அது மந்தமாகவும் உலர்ந்ததாகவும் மாறும். அது அவர்களின் PH லெவலை அதிகரிக்கிறது. PH லெவல் என்பது ஹைட்ரஜனின் சதவீதம் அல்லது சாத்தியமான ஹைட்ரஜனின் சதவீதம் என்பதாகும்.
கடல் உப்பு இல்லாத ஹேர் ஸ்பிரே இல்லையாம்.. அப்படி என்ன நன்மைகளை தலைமுடிக்கு தருகிறது..?
நம் உடலுக்கும் முடிக்கும் தண்ணீர் மிக முக்கியம். நமது தலைமுடி நமது நகங்களைப் போன்றே இறந்த செல்களால் ஆனது. இறந்த செல்கள் க்யூட்டிகல் மற்றும் மாய்ஸ்சரைசரை கொண்டிருக்கும். முடியை கலரிங் அல்லது ப்ளீச்சிங் செய்வது முடியின் இயற்கையான நிலையை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், மயிர்க்கால்களில் உள்ள ஈரப்பதத்தையும் நீக்குகிறது.
எனவே ஹேர் கலரிங் நம் முடியை சேதப்படுத்த கூடும். மேலும் வறட்சி, முடி உடைவது மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே ஹேர் கலரிங் அல்லது டையால் ஏற்பட்ட விளைவுகளை சரி செய்ய செரேட் சிகிச்சையை (cerate treatment) மேற்கொள்ளலாம். இது மீண்டும் முடிக்கு மாய்ஸ்சரைசர், பளபளப்பு, எண்ணெய் தன்மை போன்றவற்றை தரும்.
மரபியல் பிரச்சனை, வைட்டமின் குறைபாடுகள், சில மருத்துவ நிலைகள், வாழ்க்கை அழுத்தங்கள் என நரை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. இதை மறைக்க அல்லது தங்கள் தோற்றத்தை மேம்படுத்த மக்கள் தங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூச தொடங்குகிறார்கள். எனவே கலரிங் பயன்படுத்தும் போது அதில் PPD, PTD, resorcinol, phthalates, SLS, Titanium dioxide மற்றும் parabens இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair coloring, Hair fall